பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு திருக்குர் ஆண் அருளப்பட்டு நபிப்பட்டம் வழங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னமும் இஸ்லாமியப் போதனைகள் நடத்தப்பட்டன. நான்காம் ஆண்டு அல்லாஹாத்து அலாவின் கட்டளையை எடுத்துக் கொண்டு அமரர் கோமான் ஜிபுஹீல்(அலை) அவர்கள் நபிகள் பெருமானார் (சல்) அவர்களிடம் வைத்தார்கள்.எல்லோருக்கும் இஸ்லாத்தைப் பகிரங்கமாக விளக்கும்படியும் தொழுகையை கடைப்பிடிக்கும்படி போதிக்கும்படியும் கூறினார்கள்.இக்கருத்துக்களை,

"சீதவோண் கவிகை நீழ றிருந்திய குரிசி லனோர்
தூதென நபியின் பட்டந் துலங்கிய நான்காமாண்டில்
வேதம்நல் மணக்க மியார்க்கும் விரித்துற விளக்கு மென்ன
வாதிதன் பருமான் மேற்கொண் டமரர்கோ
னுரைத்துப் போனார் "[1]

இச்செய்யுளில் 'பருமான்' என்னும் பாரசீகக் சொல் 'கட்டளை' என்னும் பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம் .

இஸ்லாத்தைப் பகிரங்கமாகப் போதிக்கத் தலைப்பட்டார்கள் அண்ணல் நபி (சல் அவர்கள் இதனைக் குறைஷிக் காபீர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பாதுகாவலனாக இருந்த பெரியார் அபுதாலிப் அவர்களிடம் சென்றனர் அக்குறைஷியர். தமது தம்பி மகனை இஸ்லாத்தைப் போதிப்பதிலிருந்து தடுக்கும்படி அபுதாலிப் அவர்களை வலியுறுத்தினர். அபுதாலிபும் செய்வதின்னது என அறியாமல் குறைஷிக் காபிர்களின் வன்செயல்களுக்கு அஞ்சி அண்ணல்நபி (சல்) அவர்களின் இஸ்லாமிய போதனையைக் கைவிட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதனைச்


9

  1. 1. சீறா. தீனிலை கண்ட படலம் 1.