பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


செவியுற்ற அண்ணல் நபி (சல்) அவர்கள் பெரியார் அபு தாலிப் அவர்களுக்குப் பதில் அளித்தார்கள். அவர்களுடைய பதிலை உமறுப்புலவர் இரண்டு செய்யுட்களில் அமைத்துப் பாடியுள்ளார். ‘தங்களது வலதுகையில் சூரியனையும் இடது கையில் சந்திரனையும் வைத்தாலும் தங்களது இனத்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களை எதிர்த்துப் போரிட்டாலும் தங்களது போதனைகளைப் பெரியார் அபுதாலிப் அவர்கள் ஏற்காவிட்டாலும் இவையேயன்றித் தங்களுக்கு ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டாலும் அல்லாஹாத் த ஆலாவின் தூதன் என்ற முறையில் இஸ்லாத்தைப் போதிப் பதிலிருந்து தங்கள் மனம் சற்றும் தளர்ச்சி அடையாது" என்று அழுதவண்ணம் கூறியவற்றை இவ்வாறு தந்துள்ளார் கவிஞர்,

"பருதியைக்கொணர்ந் தணிவலக் கரத்திடைப் பதித்து
மரித னிற்சசி கொணர்திடக் கரத்தினிலமைத்து
மொருமொ ழிப்பட வினத்தவ ரொங்குறநெருங்கிப்
பொருத டக்கினு நும்மணம் பொருந்திலாதிருந்தும்.'
"ஈத லாற்சில விடரெனை யடுக்கினுமிறையோன்
றுத னியானெனச் சுருதியை விளக்குவ தலது
யேதி யாதென தகமென முகம்மது பிரியாத்
தாதை யோடுரைத் தணரிரு விழிமழை தயங்க".

இஸ்லாத்தைப் பகிரங்கமாகப் போதிக்கத் தலைப்பட்டு மக்காக் குறைஷியர்களை அண்ணல் நபி (சல்) அவர்கள் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இந்த அழைப்பைக் கேட்ட அபூலஹப் என்னும் அப்துல் உஸ்ஸா, நபிகள் பெருமானார் (சல்) அவர்களை வாயாறத் தூற்றினான். கொடுமைகள் புரியத் தலைப்பட்டான். இதனால் பெரும் பாவியாகும் தகுதியை அபூலஹப் பெற்றுக் கொண்டான். இச்சந்தர்ப்