பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


பத்திலே 'தப்பத்யதா' என்னும் சூறா அபூலஹப்புக்கும் அவனது மனைவிக்கும் நடக்க இருக்கும் கேட்டினைக் குறித்து அல்லாஹ்-த் ஆலா வினால் இறக்கப்பட்டது, இவ்வுலகிலும் மறு உலகிலும் கேடுடையவனாவான் என இவ்வாயத்துக்களின் மூலம் அபூலஹப் சபிக்கப்பட்டான் இக்கருத்துக்களே இங்கு இவ்வாறு இடம் பெற்றுள்ளது:

"அடர்ந்தெதிர்ந் துரைத்த கொடியவ னபூல
கபுபுவி யிடத்துமா கிறத்து
மிடைந்திடும் பெருங்கே டுடைய னிவான
யென்னுமப் பொருளுரை பிறப்பத்
துடங்குதப் பத்ய தாவெனத் தோன்றுஞ்
சூறத்தொன் றிறங்கிய துலகிற்
கிடந்தமும் மறை பிந் தெரி தரப் புகழ்ந்த
கிளரொளி முகம்மது நபிக்கே."[1]

இவ்வாயத்துக்களில் குறிப்பிட்டதுபோல் அபூலஹ்பும் அவனது மனைவியும் பெருங்கேட்டுக்கு இலக்காயினர் என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது. இஸ்லாத்தைத் தழுவிய காரணத்துக்காக பிலால் (றலி) என்னும் தனது அடிமையைக் கொடுமைக்கு ஆளாக்கிய இபுனுகலப் என்பவனின் கொடிய தொழில்களும் பிலால் (றலி) அவர்களை அபூபக்கர் (றலி) அவர்கள் விடுவித்த விதமும் தீனிலை கண்ட படலத்தில் 141 முதல் 149 வரை உள்ள செய்யுட்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

நபிகள் பெருமானார் (சல்) அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைக்கப் பெற்று 4 ஆண்டுகள் கழிந்து விட்டன. ஐந்தாம் ஆண்டு ஆரம்பமாகியது. இஸ்லாத்தைப் பகிரங்கமாகப் போதிக்கும்போது அண்ணல் நபி (சல்) அவர்கள் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி இருந்தது. அப்பொழுது குறைஷி மக்களிடையே பெருஞ் செல்வாக்கைப் பெற்றவர்களாக உமறு அவர்களும் அபூஜஹலும் திகழ்ந்தனர். இவர்கள் மிக்க வீரம் உடையவர்களாகவும் இருந்தனர். இவர்


  1. 1. சீறா தீனிலை கண்ட படலம்