பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

"வட்ட வாரிதிப் புவியிடை முகம்மது தமக்குப்
பட்ட மென்பவந் திறங்கிய வருடம்பத் த தின்மே
லெட்டு மாதமும் பதினொரு நாளுஞ்சென்றிதற்பின்
சட்ட கந்தனை விட்டுயிர் பிரிந்தவன்சார்ந்தார்"[1]

அபுதாலிப் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து மூன்று நாட்களே கழிந்தன. இஸ்லாத்தை முதன் முதல் தழுவிய பெண்மணியும் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக விளங்கியவரும் இருபத்தைந்து ஆண்டுகளாக அண்ணல் நபி (சல்) அவர்களின் வாழ்க்கைத் துணைவியாக விளங்கியவருமான கதீஜா (றலி) அவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்தார்கள். அல்லாஹ் விதித்த வழிக்கிணங்க குவைலிது அவர்களின் மகளார் இவ்வுலகப் புகழை நிறுத்தி விண்ணுலகத்தில் புகழ் விளங்க அங்கு சென்று விட்டார்கள் என்று உமறுப் புலவர் இவ்வாறு பாடியுள்ளார்.

"அகத்தி னிற்பெறுந் துன்பொடு மிருக்குமூன்றா நாள்
வகுத்த நாயகன் விதிவழி குவைலது மகளா
ரிகத்தி னிற்புகழ் நிறுத்திவிண் ணகம்புக ழிலங்கத்
தகுத்தொ டும்பெரும் புதுமையிற் திருவடிசாய்ந்தார்."[2]

அபுதாலிப் அவர்களின் மரணத்துக்கு ஒரு மாதத்துக்குப் பின்னரே கதீஜா (றலி) அவர்கள் வபாத்தானார்கள் என்று சிலர் கூறுவர். வேறு சிலர் ஒரு மாதமும் ஐந்து நாட்கள் கழிந்ததன் பின்னர் என்றும் மற்றும் சிலர் ஐம்பது நாட்கள் சென்ற பின்னர் என்றும் கூறுவர்.

வியாபாரிகளாகவும் யாத்திரிகர்களாகவும் யத்ரிப் நகரிலிருந்து அறுவர் மக்கமா நகருக்கு வந்திருந்தனர். அந்த


  1. 1. சீறா. பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் 8
  2. 2. சீறா பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் 1