பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


"தாமுகம் மதுநம் மிறையவன் தூதாய்
நபியெனும் பட்டமே தரித்து
வருமுறை பதினான் காண்டினின் மாசத்
தொகையினில் றபீவுலவ் வலினிற்
றெரிதருந் தேதி யைந்தினிற் றிங்க
ளிரவினிற் சிறுப்பொடு மதீனாப்
பெருநகர்க் கேக விருந்தன ரிஃது
பிறந்தது காபீர்க உமக்கே"[1]


இந்த நிகழ்ச்சி நடைபெற்றது நபித்துவத்தின் 13 ஆம் ஆண்டு என்று கூறுவர். ஸ ர் : தக் 8 ஆம் நாள் திங்கட் கிழமை அன்று நிகழ்ந்தது என்று கருதுவாரும் உளர். மற்றும் சிலர் றபீஉல் இவ்வல் மாதம் முதல் மூன்று இரவுகளில் ஒன்றில் நிகழ்ந்கதுதும் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை நிகழ்ந்தது என்று கூறுவதில் ஓரளவு கருத்தொற்றுமை இருக்கக் காணலாம்.

மதினமாநகருக்கு ஹிஜ்றத் செல்லும்பொழுது மூன்று நாட்கள் தெளர் குகையில் தங்கிவிட்டுச் சென்றார்கள் என வரலாறு கூறுகின்றது, தெளர் குகையினுள்ளே அண்ணல் நபி (சல்) அவர்களும் அவர்களின் இணைபிரியாத் தோழர் அபூபக்ர் (றலி) அவர்களும் இருந்தனர். குகைக்கு வெளியே எதிரிகளின் காலடிச் சத்தம் கேட்டது. அவர்களின் முழந்தாள்களும் தென்பட்டன. அப்பொழுது அபூபக்கர் (றலி) அவர்கள் 'யா றசூலுல்லாஹ், நாங்கள் இருவரே இங்கு இருக்கின்றோம். எதிரிகள் உள்ளே வந்தால்?' என்றார்கள். அப்பொழுத நபி (சல்) அவர்கள் இங்கு நாம் இருவர் இருப்பது, உண்மைதான். உலகத்திலுள்ள பல்லுயிர் களையும் காக்கும் ஒருவன் எங்களுடன் நீங்காது இருக்கின்றான், ஆதலினால் எதிரிகளான காபிர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்கள். அப்பொழுது அண்ணல் நபி (சல்) அவர்கள் குகையிலே புகுந்துள்ள சூரியனைப் போன்று


  1. 1. சீறா. யாத்திரைப் படலம் 65