பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


காட்சியளித்தார்கள், இக்கருத்துக்களே சீறாப்புராணத்தில் இவ்வாறு இடம் பெற்றுள்ளன.

"இருவர் நா மிருப்பப் பூவி னிருந்தபல்லுயிருங்காக்கு
மொருவனம் மிடத்தை நீங்கா துடனுறந்திருப்பக் காபிர்
தெரிதருங் கண்ணிற் காணச் செயலுமற் றுண்டோ வென்றா
ரருவரை முழையிற் புக்கி யருக்கனொத் திருக்கும்வள்ளல்,"[1]


இருவரும் மூன்று நாட்கள் தெளர் குகையில் தங்கிவிட்டு நான்காம் நாள் அங்கிருந்து புறப்பட்டனர் என்று 'அடுக்க லின்புற மூன்று நாளிலிருந்து நாலா நாள்' (சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்!) எனக் கூறப்படுகிறது.

இவ்வாறு மக்கமா நகரை விட்டுப் புறப்பட்டுச்சென்ற அண்ணல் நபி (சல்) அவர்களும் அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (றலி) அவர்களும் மதீன மாநகரை அடைவதற்கு முன்னர் குபா என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். 'இன்பச் செல்வமே, தருகுபா வென்னுமத் தலத்தை நண் னினார்’ (மதீனம் புக்க படலம் 25.) என இது வருணிக்கப்பட்டுள்ளது. இருவரும் மதீன மாநகருக்கு அணித்தாயுள்ள குடபா என்னும் நகரை றபீஉல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் திங்கட்கிழமை அன்று வந்தடைந்தார்கள் என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். இதனையே உமறுப்புலவரும் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"ஆசிலா தவரொடும் றபீயு லவ்வலின்
மாசம்பன் னிரண்டினில் வதிந்த திங்களிற்
பாசமுற் றவரிடம் பரிந்து நந்நபி
வாசமுற் றுறைந்தனர் மகிழ்வின் மாட்சியால்.”[2]


  1. 1. சீறா. யாத்திரைப் படலம் 111
  2. 2. சீறா. மதீனம் புக்க படலம் 26