பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


அங்கே ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது, நபிகள் பெரு மானாரினாற் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் இதுவாகும். 'மஸ்ஜிதுந் தக்வா' என அழைக்கப்படும் இப்பள்ளி வாசல் (அல்குர் ஆன் 9 10?) காப்ந்த ஒலையினால் வேயப்பட்ட கூரையை உடையதாய் இருந்தது. இதனைக் கட்டி எழுப்புவதில் பெருமானாற் (சல்) அவர்களும் தீவிரமாக ஈடுபட் டார்கள் எனக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளிவாசல் ஒலி பரப்பிக் கொண்டிருக்கும் வெண்மையான சுண்ணாம்பினால் பூச பட்டிருந்தமையினால் எல்லா இடங்களும் அழகு மிக்கதாய் இருந்தன' என கவிதை நயம் ததும்ப இவ்வாறு உமறுப் புலவரால் பாடப்பட்டுள்ளது.

"அவிரொளி முகம்மது மாலி போன்றவ
ரெவருமற் றின்புற விருந்தவ்வூரினிற்
சவிதரும் வெண்சுதை தயங்க வெங்கணுங்
கவினுறப் பள்ளியொன் றரிதிற் கட்டினார்." [1]

இங்கே தான் இஸ்லாமிய வரலாற்றிலே முதற் குத்துபாப் பிரசங்கம் பெருமானார் (சல்) அவர்களினால் நிகழ்த்தப் பட்டது. அன்று முதல் இறுதிநாள் வரை குத்துபா ஒத வேண்டும் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பணித் தமையை உமறுப்புலவர் இவ்வாறு வருணிக்கிறார்.

"அத்தலத் துறைந்து பி னடுத்த வெள்ளிநா
ளுத்தியத் தமரொடவ் வரைந்த பேர்கட்கு
மித்திலத் தின்று தொட் டீறு நாண்மட்டுங்
குத்துபா வெனநபி குறித்துக் காட்டினார்."[2]

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அன்று குத்துபா தொழுவித்தமை 38 ஆம் செய்யுளில் குறிப்பிடப்படுகிறது

அண்ணல் நபி (சல்) அவர்களின் தாயாரான ஆமீனா அம்மையாரின் உறவினர் மதீனாவில் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பனி நஜ்ஜாறுகள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்


  1. 1. சீறா. மனதிம் புக்க படலம் 7
  2. 2. சீறா. யாத்திரைப் படலம் 26