பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


சீறாப்புராணம் மூன்று காண்டங்களாக விலாதத்துக் காண்டம் நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜூறத்துக் காண்டம் என பிரிக்கப்பட்டுள்ளது போன்று மூன்று காண்டங்களிலும் மூன்று விதமான காலக் கணிப்புகள் இடம் பெற்றுள்ளன. விலாதத்துக் காண்டத்தில் யானை ஆண்டை அடிப்படையாக வைத்தே வரலாற்றுக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அத்தோடு அண்ணல் நபி (சல்) அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சுட்டப்படும் பொழுது அவர்கள் தம் வயது அடிப்படையில் அந்நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. நபிகள் பெருமானாருக்கு நபி பட்டம் என்னும் நுபுவ்வத்' அளிக்கப்பட்ட பின்னர் நுபுவ்வத்துக் கிடைத்த இத்தனையாம் ஆண்டு என அக்காலத்தில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் குறிக்கப்படுகின்றன. ஹிஜ்ரத்துக்குப் பின்னர் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் வரலாற்று அடிப்படையில் இத்தனையாம் ஹிஜ்றி ஆண்டு என விவரிக்கப்படுகின்றன. உமறுப்புலவரைப் போன்றே ஏனைய முஸ்லிம் புலவர்களும் ஹிஜ்றி நிகழ்ச்சியைக் குறிப்பிடும் பொழுது 'மக்கமா நகரத்திலிருந்து' மதீன மா நகருக்குச் சென்ற' இத்தனையாம் ஆண்டு என்றே வருணிக்கின்றனர். அண்ணல் நபி (சல்) அவர்கள் மதின மாநகரை அடைந்த ஒராண்டைக் குறிப்பிடுவதற்கு,

"பூண்டநன் கலம்போற் காரண வரைகள்

புடையுடுத் திருந்தமக் காவிற்

கூண்டிருந் தெழுந்து மதீனமா நகரிற்

குவத்தொடு மினிதுறப் புகுந்தோ

ராண்டு சென் றதற்பின்.........' "[1]

இன்னொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி முஸ்லிம்கள் தொழும் திசையாகிய கிப்லா மாற்றப்பட்டமையாகும். அப்பொழுது இறை தூதர் (சல்) அவர்கள் பைத்துல் முகத்திஸ் என்னும் ஜெருசலத்தின் திசையையே கிப்லா


  1. 1. சீறா. சல்மான் பாரிசுப் படலம் 1