பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143


வாகக் கொண்டு தொழுது வந்தார்கள், கஃபாவின் திசைக்குக் கிப்லாவை மாற்ற விருப்பம் கொண்டிருந்க போதிலும் அதற்கான அல்லாஹ்வின் உத்தரவை அண்ணல் நபி (சல்) அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஹிஜ்றி நிகழ்ச்சி நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகியது. சஹ்பான் மாதம்.

"மகிதலத் தினிலுயர் மக்க மாகிய
நகர் விடுத் தனிமதி னாவை நண்ணிச்சூழ்
புகழொடுந் தீனெறி புரந்து வைகுநாட்
டிகழ்சகு பானென விளங்குந் திங்களில்" [1]

இந்த சஹ்பான் மாதம் 15ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மத்தியானத் தொழுகை நேரமான லுஹறுவேளை, லுஹறுத் தொழுகையின் இரண்டு றக்க ஆத்துக்களைத் தொழுது முடித்துவிட்டார்கள் அண்ணல் றசூல் (சல்) அவர்களும் ஏனையோரும். இந்நிகழ்ச்சி இவ்வாறு வருணிக்கப் பட்டுள்ளது.

"மிக்கநற் றே திமு வைந்தின் மேவிய
தக்கசெவ் வாயினி லுஹறு நேரத்தில்
ஹக்கனை யிரண்டிறக் ஆத்துத் தான்றெழு
தொக்கலோ டிசைநபி யுறையு மொல்லையில்." [2]

இது நிகழ்ந்தது லுஹறு நேரத்தில் என்று சிலரும் அஸ்ர் நேரத்தில் என்று வேறு சிலரும் கருத்துத் தெரிவிப்பர். இச்சந்தர்ப்பத்தில் அமரர் கோன் ஜிபுறீல் (அலை) அவர்கள் மண்ணுலகுக்கு இறங்கி அண்ணல் நபி (சல்) அவர்களிடம் அல்லாஹ்வின் கட்டளையை அறிவித்தார்கள். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லா என்னும் புனித பள்ளி வாசலை நோக்கித் தொழவேண்டும் என்னும் இறைவன் கட்டளை அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதுவே,


  1. 1. சீறா. கஃபத்துல்லாவை -ோக்கித் தொழுத படலம் 4
  2. 2. சீறா. கஃபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் 6