பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148


யுறையுங் கற்பினுக் குறையிடத் தினையொளிர்மணியை

மறையி னேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார்". [1]

என்று உமறுப்புலவரால் வானளாவப் புகழப்பெற்றஹப்ஸா (றலி) அம்மையார் அவரகளை ஹிஜ்றி மூன்றாம் ஆண்டிலே "மறையி னேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார்." என வருணிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டில் தான் அண்ணல் நபி (சல்) அவர்களின் புதல்வியருள் ஒருவரான உம்மு குல்தம் (றலி) அம்மையாரை (மா தருக்கா கும்முக் குல் தூமணி விளக்கை-(6) உதுமான் இப்னு அப்பாஸ் (றலி) அவர்களுக்கு (கோதி லாவுது மான் மனங் களிப்புறக் கொடுத்தார்-(6) திருமணம் செய்து வைக்கப்பட்டது. இங்கே நபிகள் பெருமானாரின் மற்றொரு திருமணம் குறிப்பிடப்படுகிறது. உசைமா அவர்களின் புதல்வி ஸெயினப் றலி) அம்மையாரை (செல்வி யையழில் ஸெயினபைப் பெறைச்செழு மமுதை-(8) அண்ணல் நபி (சல்) அவர்கள் திருமணம் புரிந்து எல்லா வளங்களோடு வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதே ஆண்டில் பாத்திமா (றலி, நாயகி அவர்கள் ஒரு புதல்வரைப் பெற்றெடுத்தார்கள்.

"இறம லான்பதி னைந்தினில் வெள்ளியி னிரவின்
மறுவில் கற்புடை பாத்திமா வெனுந்திரு மடமா
றைமும் வெற்றியு மோருரு வெடுத்தென வரிதிற்
பொறையு யிர்த்தன ரொளி தர வொருபுதல்
வனையே".[2]

அப்புதல்வனுக்கு நபிகள் பெருமானார் பெயர் இட்டமையும் இங்கு வருணிக்கப்பட்டுள்ளது.


  1. 1, சீறா . அசனார் பிறந்த படலம் 4
  2. 2. சீறா . அசனார் பிறந்த படலம் 11