பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


"......................................செம்மல்

வசையறுங்கரக் கெடுத்தரும் பேரனை வாழ்த்தி

யசனெ னச்செழுந் திருப்பெயர் தரித்தன ரன்சிற'[1]

ஹிஜ்றி மூன்றாம் ஆண்டில் இஸ்லாமியா வரலாற்றிலே இரண்டாவது முக்கியமான போர் நிகழ்ந்தது. மதீனாவுக்கு அருகாமையில் உள்ள உகுது மலை அடிவாரத்தில் நிகழ்ந்தமையால் அப்போர் உகுதுப் போர் என அழைக்கப்பட்டது. அன்று வெள்ளிக்கிழமை ஷவ்வால் மாதம் 14 ஆம் நாள். குத்துபாத் தொழுகைக்குப் பின்னர் முகம்மது (சல்) அவர்கள் போருக்கு ஆயத்தமானார்கள் இந்நிகழ்ச்சி,

"பேத மற்ற ஷவ் வாலென வுரைத்திடும் பெரிய

மாத மேழிரண் டினில்வெள்ளி வாரத்தின் வணங்கி

யோது குத்துபாத் தொழுதபின் மறையிய மொலிப்பத்

தீத றும்படி யெழுந்தனர் ஹபீபெனுஞ் செம்மல்,,[2]

என சீறாப்புராணத்தில் வருணிக்கப்பட்டுள்ளது, உகுதுப் போரில் பங்கு கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை (700) 'தீனவரேழுநூறு (85) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உகுதுப் போரிலே முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு அண்ணல் நபி (சல்) அவர்களின் சிறிய தகப்பனாரான ஹம்பர் இப்னு அப்துல் முத்தலிப் (றலி) அவர்கள் வபாத் தாண்மையேயாம். வஹ்சி என்பவனின் குத்துவாளுக்கு இரையான ஹம்ஸா (றலி) அவர்கள் தள்ளாடித் தள்ளாடி அல்லா ஹூத்த ஆலாவையும் அதாவது திருத்தூதரையும் நினைவு படுத்திக் கொண்டு படிக்கும் நல்ல மொழியாகிய கலிமாவை அடிக்கடி கூறிக் கொண்டவராய் நிலத்திலே வீழ்ந்தார்கள்.


  1. 1. சீறா. அசனார் பிறந்த படலம் 18
  2. 2. சீறா. உகுதுப் படலம் 77