பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


அவருடைய உயிர் பிரிந்தது. அவரும் சுவன பதிக்கு ஏகி விட்டார். இக்கருத்துக்களை இவ்வாறு அமைத்துப்பாடுகிறார் ஆசிரியர்.

"மெல்ல நின்றுநின் றசைந்தசைந் துணர்வுமேலாட
இல்ல லாவையும் ஹபீபையு முளத்தினிலிருத்திக்
கல்லு நன்மொழி வாக்கினி லடிக்கடி கலிமாச்
சொல்லி வீழ்ந்தனர் போயின குறைந்தனர்சுவனம்"[1]

உகுதுப் போரிலே அண்ணல் நபி (சல்) அவர்களின் ஒரு பல் ஒரு கல் தாக்கியதனால் சேதமுற்றது சிதைந்தது. இதன் பயனாக உணர்வு உள்ளவர்களாக பூமியில் சரிந்தார்கள். அசுகாபிமார் சகீதாகவும் வபாத் தாகவும் பெருமானார் (சல்) அவர்களின் பல் சகீதாகவும் சிதையவும் அல்லாஹ்வின் ஏவலே காரணம் எனக் கூறிய உமறுப்புலவர் ஒரு கேள்வி யையே எழுப்புகிறார். எந்த உலகத்திலும் துன்பம் இல்லாதவர்கள் யார் தான் இருக்கின்றனர்? ஒருவருமில்லை என்ற பதிலைத் தொனிக்க வைக்கிறார். இக்கருத்துக்கள் அடங்கிய இரண்டு செய்யுட்களையும் பார்ப்போம்.

"ஈத லாதொரு கவண்கல் கீழ் வாப்புறத்திலங்குஞ்
சோதி மூரலுஞ் சிதைத்திடத் தைத்தது தொகுத்த
பூதலத்தினி லுணர்வுடன் சாய்ந்தனர் பொருவா
மாதி ரத்தொடு மதியொடும் பேசிய வள்ளல்."
"பத்தி மீறிய தீனவர் படவுமக் கவணாற்
றத்தி தத்தியிற் படரொளி முகம்மது தமக்குங்
கத்த னேவலிற் றுணிவந்து கருதிய தென்றா
லெத்த லத்தினு மியாவரே துன்பமி லாதார்"[2]


  1. 1. சீறா. உகுதுப் படலம் 241
  2. 2. சீறா உகுதுப் படலம் 244-245