பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153


அங்கே ஓரிடத்தில் எல்லோரும் நித்திரை கொண்டார்கள்' நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மற்றவர்களைவிடச் சற்றுத் தள்ளி தூங்கிக் கொண்டிருந்தார்கள். நபிகள் பெருமானாரைக் கொல்லக் கருதியவனாக நித்திரை செய்து கொண்டிருக்கும் நபிகள் பெருமானாரின் கைவாளை தன் கையில் எடுத்துக்கொண்டான் அந்த அறபி, இதனை உமறுப் புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"துன்ற ருங்குணத் தூதர்கை வாளினைச்
சென்றெ டுத்தடற் செங்கையிற் சேர்த்தினான்,"1

நபிகள் பெருமானாரின் சிறந்த பண்பினைக் குறிப்பிட 'நெருங்குதற்கு அருமையான குணத்தை உடையவர்' என பொருள்பட்ட 'துன்றருங்குணம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இரத்தந் தோய்ந்த இந்த வாளினைக் கையில் எடுத்தவனாய் முஸ்லிம்களைப் பழிக்கு முகமாக உம்மை இரண்டு துண்டாக்குவேன். உம்மைத் தப்பிப்பவர் யாவர்? என்று மமதையுடன் கேட்டான். அவன் ஒருவரும் இல்லை என்ற பதிலையே எதிர்பார்த்தான். இக்கருத்துக்கள் பொதிந்த செய்யுள் இவ்வாறு அமைந்துள்ளது.

"மண்டு செம்புன லாடியவாளுரீஇக்
கொண்டு தீனர் குறைபட வேயிறு
துண்ட மாக வுனைத்துணிப் பேனது
கண்டி யாவர் விலக்குவர் காணென்றான்."

நபிகள் பெருமானார் அஞ்சா நெஞ்சினராய் இவ்வாறு பதிலளித்தார்கள். எனது வாள் (நாந்தகம்) உன் கையிலாயது. வெற்றியைத் தமதாக்கிக் கொண்ட வீரர்களான சஹா பாக்களும் நித்திரை கொள்கின்றனர். என்னை மடக்குவதற்காக இவ்வாறு பேசினாய். அல்லாஹ் ஒருவனே என்னைக் காப்பாற்றுபவன். வேறொருவருமில்லை என்றார்கள், இக் கருத்துக்கள் பொதிந்த பாடல் இதோ,


1 சீறா. தாத்துற்ற ஹாக்குப் படலம் 47