பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155


அறபி தான் செய்த பெரிய குற்றத்தை ஆண்டவனுக்காக மன்னித்தருளும்படி வேண்டி நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் சரணடைந்தான். இதனையே உமறுப்புலவர் இவ்வாறு கூறுகிறார். -

"பிறர்க்க டாத பெரும்பிழை நெஞ்சினிற்.
குறிக்கு நீர்மையன் செய்தவிக் குற்றமே
மறைக்க ணின்று வளரிறைக் காகநீர்
பொறுக்க வேண்டு மெனச் சரண் பூண்டனன்"[1]

தாதுர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை வருணிக்க உமறுப் புலவர் உபயோகித்த செய்யுட்களிலே வாளைக் குறிக்க கைவாள், நாந்தகம், கோணம், வைவாள் என்பன பயன்படுத்தியுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.

பனு முஸ்தலக் கோத்திரத்தவர் மதீன மாநகரின் சுற்றுப்புறத்தில் கலகம் விளைவித்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முறைஸீக் என்னும் இடத்தில் சண்டை மூண்டது. இவர்கள் தோற்கடிக்கப் பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் பனு முஸ்தலக் கோத்திரத்தின் தலைவரான ஹாறித் பின் அபீலர்றார் என்பவரின் புதல்வி ஜூவைறியா ( றலி) அம்மையாரும் ஒருவர். தாபித் இப்னு கைஸ் (றலி) அவர்களின் பங்காக அவர்களுக்கு ஜவைறியா அம்மையார் கொடுக்கப் பட்டார். இந்நிகழ்ச்சி இவ்வாறு பாடப்பட்டுள்ளது.

'தருமத் திகழ் தாபித்தென வரு மன்னவர் சார்பின்
வருமந்திகழ் தருஆரிது வரத்தாலவ தரித்த
திருவுங்குண நலனும் பெறு செயலும் பொறை நிறையு
முருவந்தமு முறவந்தனள் ஜூவைறாவெனவொருமான்"[2]


  1. 1. சீறா. தாத்துற்றஹாக்குப் படலம் 56
  2. 2. சீறா. முறைசீக்குப் படலம் 45