பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157


இந்த ஹிஜ்றி ஆண்டிலே மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீரில்லாதவிடத்து நீரில்லையே, ஒலுச் செய்ய முடியாமல் இருக்கிறதே, அதன் பயனாகத் தொழ முடியாமல் இருக்கிறதே, கடமைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறதே என்று கவலை கொள்ளாமல் இருந்தற் பொருட்டு பறுளான கடமைகளைத் தப்பாது செய் வதற்கு ஒரு வழியாக தயமும் செய்து கொள்ளலாம் என்று அல்ல பஹூத்த ஆலா விதித்தான் என்று ஜிபுறில் (அலை) அவர்கள் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு அறிவித்தார்கள். இதன் பயனாக நீர் கிடைக்கவில்லையே என்ற கவலையும் அசன்றது. இக்கருத்துக்களையே உமறுப் புலவர் இல்வாறு பாடியுள்ளார்

"நெஞ்சாகுல மறநீரக மில்லாவிட நியமந்
துஞ்சாவகை தயமுஞ்செய்து தொழமேலவன் விதியின்
மிஞ்சாரன மொழியாரமு திஃதென்ன விரைந்து
மஞ்சார் வெளி வழியேகொடு வந்தார்ஜிபு றீலே"[1]

இதனை அறிந்ததும் நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் இம்முறைமையை மேற்கொண்டார்கள் என்பதனை,

".............இவரும்பிற ருளரு
முருகும்படி பிறிதொன்யையு நினையாதொரு பொருளைத்
தருமந்திர நெறியின்மடி தயமுஞ்செய்து தொழு தார்".[2]


  1. 1.சீறா முறைசிக்குப் படலம் 29
  2. 2. சீறா முறைசிக்குப் படலம் 40