பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158


அபூ சுபியானின் தலைமையில் பத்தாயிரம் போர் வீரரைக் கொண்ட ஒரு சைனியம் மதீன மாநகரைத் தாக்கும் பொருட்டு முன்னேறி வருவதை எம்பெருமானார் (சல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. இதனைத் தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி தங்கள் தோழர் அசுகாபிமாருடன் கலந்து ஆலோசித்தார்கள் நபிகள் பெருமானார் (சல்) அவர்கள். இவ்வாறு கலந்தாலோசித்த பொழுது சல்மான் பாரிசி (றலி) அவர்கள் தமது கருத்தைத் தெரிவித்தார்கள். 'வண்மைத் தக்க தருவென வுதவுஞ் சல்மான் பாரிசி - சொல்வார். (கந்தக்குப் படலம் 42) கத்பான், அசத் அவுஸ் சனானா, யூதர் முதலிய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். மக்காவிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாதாரின் அணியில் இடம் பெற்றனர் என்பதை உமறுப்புலவர் இவ்வாறு ஒரு செய்யுளில் அமைத்துப் பாடி யுள்ளார். ஒவ்வொரு கோத்திரத்தாரையும் வெவ்வேறு அடைமொழி கொடுத்து வருணித்துள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.

"வசையிலாக் கத்பா னென்னு மாயமு மதிப்பில்லாத
அசதெனுங் குழுவு மிக்க அலசெனுங் கணமு மூரித்
திசைபுகழ் தருங்கனானாச் சங்கமுந் திரட்டி யென்று
மிசையறு மெஹூதிக் காபிர் தம்மொடு மீண்டினா னால்"[1]

சல்மான் பாரிசி (றலி) அவர்கள். தீனர் சூழ்தர வகழொன்று திருத்துவ மென்றார் (45). இவ்வாறு 'தூய பேரக ழிழியற்றி யிங் கிருந்தனர். 82). உயை வந்த படலத்தில் அகழ்ப் போர் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது அமீர் இப்னு அப்துத் என்பவனுக்கும் அலி (றலி) அவர்களுக்கும் மும்முரமாக நடைபெற்ற போர் இப்படலத்தில் நுணுக்கமாக விவரிக்கப்படுகிறது. இப்பட லத்தில் 72 முதல் 77 வரை உள்ள செய்யுட்களில் எதிரிகளின் தோல்வி விரிவாக வருணிக்கப்பட்


  1. 1. சீறா . கந்தக்குப் படலம் 39