பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162


மறுமண வாய்ப்பில்லாமல் இருந்தார். இத்தகைய சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி (சல்) அவர்கள் (றலி) அம்மையாரை திருமணம் புரிந்து கொண்டார்கள். இச்செய்தியையே.

"அன்றவர் கிருபை யாகி யகமகிழ்த் திவரோடென்றும்
ஒன்றிய மனமாய்க் கற்பி லுயர்ந்தவ ரென்ன வாழ்ந்தார்"[1].

உமறுப்புலவர் இவ்வாறு விதத்தோ துகிறார்.

இந்தத் திருமணத்தின் பின்னரே பெண்களுக்கு நாணம் ஒர் அணிகலம் என்னும் இறைமறைத் திருவாக்கு அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு அருளப்பெற்றது. இதனையே உமறுப் புலவர், '......இரு நிலக் கிழமை பூண்ட, மாதர்க ளெவர்க்கு நாண மணியணிப் பூணா மென்றார்.’’ என வருணித்துள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.

இந்த அடிப்படையிலேதான் பருதா முறை முஸ்லிம் பெண்களிடையே புகுத்தப்பட்டது.

"தனிமுதற் றூத ராறா மாண்டினிற் றகைமைபெற்ற
வனைகழல் சகுயி மார்கள் வழுத்திட விருக்குநாளில்".[2]

என ஹிஜ்றி ஆறாம் ஆண்டு ஆரம்பமாகியது பற்றி குறிப்பிடுகிறார் உமறுப்புலவர் தமது சீறாப்புராணத்தில். இந்த ஆண்டிலேயே தான் புனித உம்றாவை நிறைவேற்ற அண்ணல் நபி (சல்) அவர்கள் அசுகாபித் தோழர்களுடன் மக்கமா நகருக்குச் சென்றது. '....மக்கத்தி,லோது ஹஜ்ஜுமுறாச் செய்ய உன்னியே, போதுந் தன்மை......' (உமுறாவுக்குப் போன படலம் 2) என்று இதுவே குறிப்பிடப்படுகிறது. மதீன மாநகரிலிருந்து மக்க மாநகருக்கு ஹிஜ்றி ஆறாம்


  1. 1. சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 16
  2. 2. சீறா. செயினபு நாச்சியார் கல்யாணப் படலம் 23