பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171


"வந்தவா யத்தைத் தேர்ந்து தீனவர் வதன்நோக்கிப்
பந்தனை வாய்மை யெற்குப் பகர்ந்தது யோர்களெல்லாம்
விந்தைசே ருவணை மீதின் மேவுவர் நிரையமில்லென்
றந்தமி லிறைவன் றூத ரறைந்தன ருளங்கனித்தே,"[1]

இப்பால் றசூல் (சல்) அவர்களும் தோழர்களும் மதீனா மாநகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் மற்றொரு திருமறை வசனப் பெருமானார் (சல்) அவர்களுக்கு இறங்கியது. கயவர்களாகிய இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களான தீனவர்களுக்கு அன்பாய் வெற்றியைக் கொடுத்தோம் என்ற அல்லாஹூத் த ஆலா கூறுவதாக அமைந்திருந்தது அவ்விறை வாக்கியம். இதனையே உமறுப் புலவர் இவ்வாறு பாடியுள்ளார்.

"ஈனமி லாயத் தொன்றங் கிறங்கின கயவா மீதில்
தீனவ ரெவர்க்கு மன்பாய்க் கொடுத்தனஞ்செயம தன்றே." [2]

சீறாப்புராணத்தில் இறுதியாக விவரிக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி பல பெரியார்கள் இஸ்லாத்தைத் தழுவியமை பற்றி குறிப்பிடுவதாகும்.

"பரிவி னாலிசு லாமினிற் புகவெனும் படியா
லரிய திண்டிறல் வயவர்கள் வந்தன ரவரின்."[3]

அவர்களுள் நால்வர் குறிப்பிடத்தக்கவர்களாவர். அந்நால்வரும் பல்வேறு துறைகளில் இஸ்லாத்தின் பாதுகாப்பிற்காகவம் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர்களாவர்

  1. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 111
  2. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 112
  3. சீறா. சல்மா பொருத படலம் 3