பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172


காலிது இப்னு வொலீத் (றலி) என்பவர் ஒருவர். இவரது வேலாயுதத்தில் எப்பொழுதும் மாமிசம் இருக்கும் என்ற அவரது வலிமை போற்றப்படுகிறது. மற்றவர் அமீர் இப்னு ஆஸ் (றலி) அவர்களாவார். இவர் கண்ணைக் கவரும் அழகு மிக்கவர் என்றும் மானின் கண்கள் போன்றிருக்கும் மை தீட்டப்பட்ட கண்களை உடைய மகளிர் மையல் கொள்ளக் கூடிய அழகினை உடையவர் என்றும் வருணிக்கப்பட்டுள்ளார். மூன்றாமவர் உகைல் இப்னு ஹாத்தாலிப் (றலி) அவர்கள். இவர் எப்பொழுதும் வாசனை கமழ்கின்ற மலர்களினாலான மாலையை அணிந்திருப்பவர் என்று பாராட்டப் பட்டுள்ளார். இஸ்லாத்தைத் தழுவிய நான்காமவர் உதுமான் இப்னு தல்ஹா (றலி) என்பவராவார். இவரோ காமதேனுவைப் போன்று காட்சி அளிக்கும் கைத்தலத்தை உடையவர் என்று புகழப்பட்டுள்ளார். இக்கருத்துக்களையே உமறுப்புலவர் தமது சீறாப்புராணத்தில் சிறப்பாக இவ்வாறு விவரித்துள்ளார்.

ஊன்கி டந்தவேற் கரனொலீ துதவுகா லிதுவு
மான் கி டந்தமை விழிமின்னார் மால் கொளும் அமுறுங்
கான்கி டந்தமா விகைபீத் தாலிபுக் கையிலு
மான்கி டந்தகைத் தலத்தலகா வருளுது வானும்"[1]

இவ்வாறு இஸ்லாத்தில் பலர் சேர்ந்து நன்மை பெற்றமை குறிப்பிடப்படுகின்றது.

ஆறு ஹிஜ்றி ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களுள் ஒரு சில விவரிப்பதுடன் சீறாப்புராணம் முடிவுறுகிறது. உறனிக் கூட்டத்தார் படலம் சீறாப்புராணத்தின் இறுதிப் படலமாக அமைந்துள்ளது. அண்ணல் நபி (சல்) அவர்கள் மக்க மாநகரிலிருந்து மதீன மாநகரத்துக்கு ஹிஜ்றத்துச் சென்று அங்கு பதினொராவது ஆண்டிலே தான் நபிகள் பெருமானார் (சல்)

  1. 1. சீறா. சல்மா பொருத படலம் 4