பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திறப்பு


ஹலரத் ஹஸ்ஸானுப்னு தாபித் (றவி) அவர்களின் மா கவிதையைப் பாராட்டி முகம்மது நபி (சல்) அவர்கள் இன்னல் லாஹ் யு அய்யித ஹஸ்ஸ் ன்) பிருஹில் குதுஸி --திடமாக, புனித இறையுணர்வைக் கொண்டு அல்லாஹ் ஹஸ்லானுக்கு உதவி செய்கிறான் என்று குறிப்பிட்டார்கள். நலம் விளையும் கவிதை புனைபவன்,நாயனால் தூண்டப்படுகிறான். அவன் கவிதை ஆண்டவனின் நல்லருளாகும் என்பதே இதன் விழுமிய கருத்தாகும். தொன்று தொட்டு இஸ்லாமியத் தொண்டாற்றிய முஸ்லிம் புலவர் பெரு மக்கள் பெருமானார் அவர்களைப் பற்றிப் பாமாலைகள் புனைவதைப் பெரும் பேறாகக் கருதி வந்துள்ளனர். அனைத்துலக மொழிகள் பலவற்றிலும் அவர்களைப் பற்றிய இலக்கியங்கள் சிறந்த சொற் சித்திரங்களாக இயங்கி வருகின்றன. அரபி, பார்சி உருது, துருக்கி, ஆங்கில மொழிகளில் அண்ணலாரின் பண்ணான வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் பொன்னான நூல்கள் பல உள்ளன. சரித்திர வல்லுநர்கள் சரித்திரமாகவும் , தத்துவத துறைத் தலைவர்கள் அறநூலாகவும், மார்க்க மேதைகள் சமய விளக்கமாகவும், கவிஞர்கள் காப்பியமாகவும், பல்வேறு இலக்கிய வடிவங்களாய் இறை தூதரின் எழிலார். திருவாழ்வு வரையப்பட்டுக் கொண்டே வருகின்றது. அருந்தமிழ் மொழியில் நபியவர்களின் பெரு வாழ்வை முறைப்படித் தொடங்கிப் பாடிய பெருமை புலவர் கோமான் உமறுப்புலவர் அவர்களையே சாரும்.

தமிழ்க் காப்பியங்கள் ஏனைய பெரும் உலகக் காப்பியங்களைப் போல ஆழ்ந்த அனுபவத்திலிருந்து தோன்றியவை. அவை ஒவ்வொன்றும் வீர வாழ்க்கையினையும், அவ்வாழ்க்கையின் முடிபாகிய உயர்நிலையாம் ஆன்மீக நிலையினையும் தெளிவுற விளக்குகின்றன. ஒரு மொழியின் சிறப் பியல்புகள் அத்தனையும் பிரதிபலிப்பதாக அமைவது காப்பியம். இலக்கிய கோபுரத்தின் உச்சி மகுடமாகத்