பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176


எனவே, தண்டமிழ்ப் புலவர் உமறு தமிழ்நாட்டுப் பெண்களின் அன்புக்கும் அருளுக்கும், அறத்திற்கும் ஆற்றலுக்கும், உண்மைக்கும் உறுதிக்கும், எழிலுக்கும் ஏற்றத்திற்கும், ஒழுக்கத்திற்கும் உயர்வுக்கும், கடமைக்கும் கற்புக்கும். பண்பிற்கும் பணிவுக்கும், பொறுமைக்கும் பெருமைக்கும், வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஏற்றவாறு காப்பியப் பெண்களையும் சித் திரித்துச் சொல்கிறார்.

உமறு பாடிய 92 பாடல்களுள் 6 படலங்கள் பெண் பாத்திரகளின் பெயர்களைக் கொண்டு விளங்குகின்றன இரண்டு படலங்கள் காப்பிய நாயகி கதிஜா பிராட்டியாரின் திருமணம் பற்றிப் பேசுகின்றன'விலாதத்து' காண்டத்துள் 'அலிமா முலையூட்டுப் படலம்’, 'கதீஜா கனவு காண்படலம், 'நுபுவத்து காண்டத்துள் பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்', 'ஹிஜிறத்து' காண்டத்துள் 'பாத்திமா திருமணப் படலம்', செயினபு நாச்சியார் கலியாணப் படலம்', 'கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்’, முதற் காண்டத்திலேயே 'மனம் பொருந்து படலம்", 'மணம்புரி படலம்' என்ற திருமணம் பற்றிய இரண்டு படலங்களும் காணப்படுகின்றன.

ஆமினா, அலிமா, சிற்றன்னை பாத்திமா, மகள் பாத்திமா, மனைவியர் கதீஜா பிராட்டியார், ஆயிஷா, அபுசா. செயினபு, உம்முசல்மா, ஜூவைரு, சயினபு நாச்சியார், ஆசிறு மனைவி சுமையா, உமறு கத்தாபு உடன் பிறந்தாள் பாத்திமா, நபிகள் மகள் ருக்கையா, கவுலத்து ஆகிய பெண் களின் பெருமைகளைக் கற்பனை வளமும் கருத்துச் செறிவும் கவிதை நயமும் ஒருங்கே அமையப் பாடியுள்ளார் உமறுப் புலவர். புலவர் காட்டும் பெண்மை நலங்களைக் காண்போம்.

ஆமினா: நாயகத் திருமேனி அவர்களின் நற்றாய் ஆமினா, அன்னை ஆமினாவின் இளமைக்கும் எழிலுக்கும் ஏற்றவாறு அவர்களை மென்கொடி, பூங்கொடி, குலக்கொடி, மலர்க்