பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

கொடி, மயில், மான், குயில் என இனிமை ததும்ப எடுத்துக் கூறுகின்றார் புலவர்.

மென்கொடி யாமினா............... ............ 5:32
குலக்கொடி மயில் 5:48
மென் மயில் 5:34
மடமயில் 5:44
மயில் 5:46
பொன் மயில் 5:47
அன்னமோ மயிலோா வெனுமொரு
மடமா னாமினா 5:80
பூமலர்க் குழலி யாமினா வென்னும்
பூங்கொடி 5:124
கோட்டு மாங்குயி லாமினா 6:54
செம்பொற் பூங்கொடி யாமினா 6:56
பொற்றொடி 6:93
மலர்க்கொடி 6:94
ஆமினா வெனுங் குலக்கொடி 6:98
பொறிநிக ராமினா வென்னும் பூங்கொடி 8:2

பேரெழில் வாய்ந்த அன்னை ஆமினாவின் குழலழகை உமறுப்புலவர் விளக்கும் திறன் பாராட்டற்குரியதாகும்.

மஞ்சு வார்குழ லாமினா 5: 33, 68
போது பேர்குழ லாமினா 5:52
மன்ற லங்குழ லாமினா 5:53,64
செறிந்த வார்குழ லாமினா 5:55
வனக்க ருங்குழ லாமினா 5:60
மருமலர் செறிந்து வண்டுகண் படுக்கு
மஞ்செனுங் கருங்குழன் மடந்தை 5:113
வண்டணி குழலா ராமினா வெனும் பேர் மடந்தை 5:119