பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

திகழ்வது காப்பியம். தன்னால் பெறக்கூடிய அனைத்தையும் கையாண்டு அலங்காரமாகவும், கண்கவர் முறையிலும் கவிஞன் கோபுரத்தைக் கட்டி எழுப்புகிறான்.பெருங்காப்பிய இலக்கணங்களாகிய தன்னேரிலாத் தலைவன் (நபிகள் நாயகம்), நானிலத்தின் வருனனை இவைகளைப் பெற்றுள்ளமையால் சீறாப்புராணம் பெருங்காப்பிய வகையில் சேர்க்கப்படும். அதுமட்டுமின்றித் தமிழ் நாட்டின் முதல் வரலாற்றுக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைப் போல நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட சீறாப்புராணமும் வரலாற்றுக் காப்பியம் (Historic Epic) எனலாம். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் தலை சிறந்தது சீறாப்புராணம், உமறுப் புலவர் தமிழ் மொழிப் பற்றும், தமிழ் நாட்டுப் பற்றும் மிகுதியாக உடையவர். அவர காப்பியம் இயற்றியது "பால் வாய்ப் பசுந் தமிழில்’’. ஆனால் அவருடைய காப்பியத் தலைவர் அரபு நாட்டில் வாழ்ந்தவர். அவர் போதித்த மதமும் பிற தமிழ்க் காப்பியங்கள் பேசுகின்ற மதங்களினின்றும் வேறுபட்ட து என்றாலும் சீறாப்புராணத்தில் அரபியும், தமிழ்நாடும் அரபு நாடும், இஸ்லாமும் இந்திய மதங்களும் சேர்ந்து, இயைந்து, இணைந்து பட்டை தீட்டப் பட்ட கண்ணாடியின் மீது வீசும் ஒளி அழகிய பல வண்ணங்களை கண்ணுக்கு விருந்தாகக் காட்டுவது போல அறிவுக்கும் சிந்தைக்கும், பலவகை அனுபவங்களையும் சுவைகளையும் அளித்து நிற்கிறது என்று அழகுற மாண்புமிகு நீதிபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். உமறுப்புலவரின் காப்பியத்தலைவர் புராண நாயகரோ, இதிகாச புருஷரோ அல்லர்; சரித்திர நாயகர், "நபிகள் வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவமும் வெள்ளிடை மலைபால் இங்கு விளங்குகிறது. ஒரே பகலாக இருப்பதுடன் அதணொளி ஒவ்வொரு பொருள் மீதும் வீசுகின்றது எப்பொருளும் அவ்வெளியிலிருந்து மறைய இடமே இல்லை" என்று ரெவ ரெண்ட்பாஸ் வொர்த் ஸ்மித் தெள்ளிதின் உணர்த்துகிறார் அத்தகைய வரலாற்றுப் புனிதரின் வாழ்வும், வாக்கும் பதிவு