பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190


பெற்ற தாயைவிட செவித்தாய் உற்ற தாயாக விளங்குவது உலகியல்பு, அலிமா நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாகப் பிறர் பிள்ளைகளுக்குப் பாலூட்டி வறுமை களைய வந்த ஆரணங்கு 'புனைய ணிப்புய ராரிதுக் குயிரெனப் பொருந்து மனைவி'. ஆரிது அவர்களின் அன்புடைய மவிை, பண்புடைய மனைவி, செல்வம் தேடி வறுமை களைய எண்ணிய தாய், சூம்பிய மார்பும், செழுமையற்ற மக்களுமுடைய அலிமா வறுமையில் வாடிய ஆமீனாவின் மகன் முகம்மதுவுக்குப் பாலூட்ட முன் வந்ததற்குக் காரணம் அவள் கண்ட கனவும் ஆரிது கூறிய உலகியலும், செல்வம் வரவேண்டுமென விதி இருப்பின் அது எளியவர்களிடமிருந்தும் வரலாம். செல்வந்தரிடமிருந்து தான் வரவேண்டுமென்பதில்லை. எனவே ஆமீனாவின்பிள்ளைக்கே பாலூட்டிச் செல்வம் பெறும் விதியுடையோமானால் உறுதியாக நலம் விளையும் என்று ஆரிது நல்வாக்கு கூறிய பின்னரே குழந்தையைக் கொண்டு வரச் சொல்லி அதன் முகம் நோக்கினர் இருவரும்.

"......கவினொளி கதிர்விட்
டெண்டி சையிலும் பரந்திரு
சுடரினு மிலங்கப்
பண்டு கண்டிலாப் புதுமைகொ லெனவுளம் பயந்து
விண்டு ரைத்திடா திருவரு மயங்கிமெய் மறந்தார்."

[1]

குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்க இசைந்து தம்மிருப்பிடமாகிய குனையினையடைந்தனர்.

"நிதியமும் பேறும் படைத்தன ரலிமா
நிகரிலை யிவர்க்கினி"

என்று பிறர் போற்றும் வகையில் நலம்பல பெற்று வளமாய் வாழ்ந்தனர்.

  1. 1. சீறா , அலிமா முலையூட்டுப் படலம் 43