பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194


வஞ்சி மெல்லிடை வாட்டமு நடுக்கமும் வாசக்
கஞ்ச மென்முகக் கோட்டமுங் கண்ணினிர்க் கவிழ் புங்
கொஞ்சு மென்மொழி குழறிடப் புலம்பிய குறிப்பு
மஞ்சி நின்றதும் பயந்தொடுங் கியவர லாறும்.’’[1]


"கரிய பூங்குழல் சென்னிறப் பூழ்தியிற் கரந்து
விரித ரக்கிடந் தொளிருமெய் பதைத்துவாய் வெளிறி
யெரியு நெய்யிடை யிட்டபைந் தளிரென விருந்த
வரிவை தன்வயி னெறிசெலும் பேர்கள் கண்டடைந்தார்கள். "[2]


புனிதர் முகம்மதுவை எங்கும் தேடிக் காணாத அலிமா அப்துல் முத் தலிபுவிடம் சென்று முறையிட்டாள் முத்தலிபுவின் ஆட்கள் எங்கு சென்று தேடியும் முகம்மதுவைக் கண்டு பிடிக்க இயலவில்லை. அல்லாஹூத்த அலா மறைத்த பொருளை அவன் வெளிப்படுத்தினாலன்றி மனிதர் கண்டு பிடிக்க வல்லரோ!

பின்னர் அசரீரி ஒலிகேட்டு கஃபத்துல்லாவின் தென் மேற்குப் புறமுள்ள ஓடைக்கரையில் வாழைமர நிழலில் இருந்த' முகம்மதுவைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்தனர். அலிமாவின் துன்பம் தீர்ந்தது. ஏற்றுக்கொண்ட குழந்தையைப் பெற்றவளிடம் ஒப்படைத்த பின்னர் கணவர் ஆரிதுடனும் மக்களுடனும் அலிமா ஹூனைன் நகரம் சென்று சேர்ந்தார்.

மறைபொருள் நிறைந்த நிகழ்ச்சிகளுக்கிருப்பிடமாக முகம்மதுவுக்கு அலிமாவின் இல்லம் அமைந்தது. இறை நேசக் குழந்தை முகம்மதுவை வளர்த்ததாலேயே பெரும் பேறு எய்தினர் அலிமா-யாகிய ஆரிது தம்பதியினர்.


  1. 1, சீறா. இலாஞ்சனை தரித்த படலம் 63
  2. 2. சீறா. இலாஞ்சனை தரித்த படலம் 64