பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195


சிற்றன்னை பாத்திமா

முகம்மது நபி அவர்களுடைய சிற்றன்னை பாத்திமா-அபுத்தாலிபு மனைவி புலி அலியின் தாய். அன்னை ஆமீனா, செவிலித்தாய் அலிமா பெறாத பெருமைகளைப் பெற்றார்.

நபிகன் நாயகம் (சல்) அவர்கள் உதாமிலிருத்து நலமாய்த் திரும்பி வந்த தற்செய்தி கேட்டு அபுத்தாலிபு தம் மனைக்கு அழைத்து வந்தார். வாணி பத்திற்காக சென்று பெருஞ் செல்வத்துடனும், புகழுடனும் திரும்பி வந்த முகம்மதுவக்கு வரவேற்பு கூறினார் பாத்திமா, ஷாம் நகரத்திற்கு புறப்பட்ட நாள் முதல் அன்று வரை அவளது கண்ணொளி மழுங்கியிருந்ததாகவும்,அன்றே அவரது வருகையைக் கண்ட பின்னரே கண்கள் திறந்தன என்றுக் கூறி மகிழ்ந்தார். சிறப்புச் செயல்கள் செப்த சிறார்களை அன்புடன் தழுவி கண்ணுாறு கழிப்பது அன்புடைத் தாயாரின் செயல் ஷாம், நகரிலிருந்த வந்த முகம்மதுவுக்கு பாத்திமா அவர்கள் 'கண் எச்சல்' கழுவினார்கள் என்கிறார் உமறு

"அணியிழை சுமந்த செல்வி யனைறெனும் பாத்திமாவந்
திணை விழி பெற்ற னென்ன விருகையாற் றழுவிப் பைம்பொன்
மணமலி பீடத் தேற்றி முகம்மதை யினிது பேற்றிக்
கணநிரை யயினி நீராற் கண்னெச்சிற்கழுவினரால்," [1]
தந்தை வாட்டமுந் தாயெனும் வாட்டமுந் தவிர்த்துப்
புந்தி கூர்தர வந்த தாயே"

என்று முகம்மது நபி அவர்கள் போற்றுகின்ற வாசகத்திலிருந்து "தந்தை இல்லை; தாய் இல்லை' என்ற குறையே இல்லாது தந்தையாகவும் தாயாகவும் வாடாமல் வளர்த்து ஆதரித்த அருமைத் தாயாக இருந்தார் பாத்திமா என விளங்குகிறது.


  1. 1. சீறா. மணம் பொருத்து படலம் 5