பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198


கூடித் திரண்டு பெண் வடிவெடுத்து வந்தது போலும் பெற்றியுடையவர் கதீஜா நாயகி என்பது உமறுவின் உள்ளக் கருத்து.

உலகத்திலுள்ள ஒளி அனைத்தும் ஒன்று கூடினாலும் அவை கதீஜாவுக்கு ஒப்பாகாது. தனித்தனி அழகு பொருந்திய மற்ற உலகப் பெண்களைக் கதிஜாவுக்கு ஒப்பு என்று 'வகுக்க நா வகுத் திடாது' என்றும் வியந்து பாராட்டுகிறார் புலவர் பெருமான், -

அழகு வெள்ள அமுதாகிய கதீஜாவை இரு கண்ணாரக் கண்டு களிப்பதற்கு 'இமையா நாட்டம்' பெறவில்லையே என்று நாள்தோறும் பெண்கள் எண்ணத்துள் எழும் ஏக்கத்தைத் தேற்றினாலும் தேறாது. அது மட்டுமா? நாயகியின் உறுப்பழகினைத் தக்க உவமைகளைக் கொண்டு வானவரா லும் மண்ணவராலும் உரைக்க இயலாது என்றும் அறுதியிட்டுக் கூறி விடுகின்றார்.

உண்மைதான், வானவராலும் மண்ணவராலும் தானே 'இன்னது இன்னது' எனத் தக்க உவமைகளை உரைக்க முடியாது. இதோ! பைந்தமிழ்ப் பாவலர் உமறுப்புலவர். இருக்கின்றாரே! கற்பனைக் கவிஞர் உமறு செயற்கரிய செயலாக சொன்மலை பொழிகின்ற திறத்தினைப் பாருங்கள்!

அ. கதீஜா நாயகி அவர்களின் அழகு

பிடிநடை கதீஜா வென்னும் பெடையணம் ::::::::::::::::::::::::::::::::::::::::::| 10:47

கதீஜா வெனு மயிலார் :::::::::::::::::::::::::::::::::I 20:20

மடமாமயில் ::::::::::::::::::::::::::::::::::::::::::::I 20:21

கறையிலா மதிய மெனுமயில் கதீஜா :::::::::::::::::::I 20; 29

சினப்பெடைச் செழுங்கட் கொவ்வைச்

செவ்விதழ் சிறுவெண் மூரலனப்பெடை

கதிஜா :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::I 22:30

பிடியொரு மென்னடைக்கெம் :::::::::::::::::::::::::::::I 22:30

பெருகுமிள மயில் கதீஜா :::::::::::::::::::::::::::::::::I 24; 1