பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

202


அமரர்வின் ணுலகும் புவனமும் விளக்ரு

மணிவிளக் கெணுங்க கதீஜா | 23: 105 குறைவிலா துயர்ந்து தழைத்தினி தோங்குக குலக் கதீஜா i 23; 115

வரிசைக்குங் கதிக்கு முதற்றிருத் தலமாய் மதித்திட வருஞ்சிறா மலையி

லுருசிக்குங் கனிவாய் மடமயில் கதீஜா ||| 1:7 வேதக் காரணர் மனைவியாகப்

பலன்பெறுங் கதீஜா | 11: 168 இந்த மாநிலத் தொருநிதி யேயென

திருவிழி மணியே | 10:56 துறக்கமும் புகழுஞ் சுரிகுழற் கதீஜா வென்னுமத் தோகை ill 11:12 பூத லம்புகழ் தருங் கதீஜா III 25:6

வறுமை என்னும் வெயிலால் வாடிடும் மக்களாகிய பயிர்களுக்கு பொருளுதவி என்னும் மழையைக் கொடுக்கக் கூடிய மங்கை நல்லார் கதீஜாவின் மனையை அடைந்து மக்க மாநகர் வணிகர் பொன்னும், பொருளும் வாங்கிச்செல்வது வழக்கம். அதுபோல உறுப்பொருள் இன்றி இந்த பெரு நிலத்திலிருந்து வாழ்தல் பேதமை என்பதை உணர்ந்த நபி நாயகம் (சல்) அவர்களும் அதனைப் பெரிய தந்தை அபுத்தாலிபுவிடம் தெரிவித்தார்,

வாணிபம் செய்யப் பொன்னும் பொருளும் நாடிக்க கதீஜா இல்லம் சென்ற குங்குமத் தடந்தோள் வள்ளல் முகம்மது தம் கருத்தில் செங்கயல் வரிக்கட் செவ்வாய்த் திருந்திழை கதீஜா என்னும் மங்கை தம் பெயருஞ் சித்திர வடிவம் குடிகொண்டாள். கருத்திலுதித்த காதலைப் பிறர் அறியாது மூடித் தம் பேரறிவுத் திறத்தால் காதல் உணர்வை மறைத்து வைத்திருந்தார்.

கதீஜா நாயகியாரும் நபிகள் நாயகத்தைக் கண்ட அள விலேயே-முதல் சந்திப்பிலேயே-அவரிடம் தூய அன்பு கொண்டார் முகம்மதுவின் அழகாகிய பெருள்வெளத்தில்