பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

ஒரு சில பாட்டுகளை நோக்கவோ மருதநில வயலில் உழத்தியர் நாற்று நடும் காட்சி இதோ,

"கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக்
கடை சியர் கரங்கள் தொட்(டு) ஒழுங்காய்ச்
செய்யினிற் பதிப்பத் துளிகரு(ம்) சேறு
தெறித்திடுஞ் செழுமுகச் செவ்வி
துய்யவெண் திரைபாய் சுருட்டிமேல் எறியும்
தொடுகடல் முகட்(டு) இடை எழுந்து
வையகஞ் சிறப்ப வரு(ம்) முழுமதியு(ம்)
மறுவ(ம்) ஒத்(து) இருந்தன மாதோ," ![1]


மருத நிலத்து உழத்தியர்கள் கங்கள் கையில் பொருந்திய நிறைந்த நாற்று முடியினைச் சிதறித் தங்கள் கைகளால் தொட்டு வரிசையாய் வயலினில் நடும்பொழுது தெறித்தெழும் சேற்றின் கருநிறத் துளிகள் அவர்களின் சுந்தர முகத்தில் ஒட்டிடும் காட்சி, தூய்மையான வெண்ணிற அலையாகிய பாயைச் சுருட்டி மேல் எறியும் மருத நிலக் கடலின் உச்சியின் மீது, உலகம் சிறக்க எழுந்துவரும் பூரணச் சந்திரனும் அதன் முகத்தில் உள்ள களங்கமும் ஒத்து இருந்தது.

'செறிந்த' என்ற சொல்லில் உழத்தியர் கையில் நாற்று நிறைந்திருக்கும் தன்மையும், சேறு அதாவது வயலில் நடுவதற்காக உள்ள நாற்று என்று வரும் பொருள் தொனிப்பதையும் காண்க, ‘கையினில் ஒன்று ஒருமையில் கூறிய புலவர் 'கரங்கள் தொட்டு’ என்று பன்மையில் சொல் வியிருப்பதை நோக்குக. உழத்தியர் நடுவதற்கு முன் நாற்று முடியை ஒரு கையிலேயே வைத்திருக்கும் தன்மையும், அதைச் சிதறிச் சேற்றில் நடும்போது இரு கைகளையும் அவர்கள் பயன்படுத்துவதையும் மனதிற் கொள்க. கடைசியர் என்ற வார்த்தையில்தான் எத்தனை அர்த்தபுஷ்டி. கடைசியர் என்றால் மருத நிலப்பெண்கள். நடவு எப்படி நடு-


  1. 1. சீறா நாட்டுப்படலம் 30,