பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205


திலனே என்று தயங்கினார். ஜிபுறயீல் நபிகள் திலகத்தை முன்னிலும் வலிமையாக இறுக்கி, அனைத்து உடல் உறுப்புகள் சோர்வடையும் வண்ணம் நெருக்கி, உள்ளத்தில் அச்சமுண்டாக்கத் தக்க விதமாய் அழுந்த அணைத்து 'நபியே, இனி ஓதுங்கள்' என்றார். நபிகள் நாயகமும் திருவாய் மலர்ந்து ஜிபுறயீல் கற்பித்தபடி வேதம் ஓதினார்.

ஜிபுறயீல் இறுக அணைத்த வருத்தத்தாலும் அச்சத்தாலும் நபிகள் நாயகத்திற்குக் குளிர்சுரம் கண்டது. ஹீரா மலையிலிருந்து நடு இரவில் மனைக்கு வந்து மனைவியிட ம கதீஜா, ஒரு துப்பட்டியை எடுத்துப் போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். 'கதீஜா நாயகியோ உள்ளங் கலங்கி உடல் பதறி விரைந்தெழுந்து போய் துகில் கொண்டு போர்த்தினார்கள். பின்னர் முகம்மது அவர்களிடப் 'எந்தன் ஆருயிரே! இகலட லரி யேறே! சிந்தை சித்திமேய் திருக்கொடு மதிமுகம் தேம்ப வந்த வாறெவை யுரைக்க' வென்று வேண்டினார்.

நபிகள் நாயகமும் நடந்ததைக் கூறினார். கல்வி கேள்விகளில் சிறந்த உலக மாதாவாகிய கதீஜா நாயகி அந்நிகழ்ச் சியைக் கேட்டு இறைவனின் திருக்குறிப்பையுணர்ந்த அச்சமுற்றிருந்த முகம்மது அவர்களை ஆறுதல் கூறித்தேற்றினார். இந்நிகழ்ச்சியால் குறையேதும் நேராது என்று தேறி, "நாயகமே, உலகத்தில் உண்டாகும் தீங்குகள் அனைத்தையும் அறத்தொலைக்கும் ஆற்றலுள்ள உங்களுக்கு மனிதர்களால் செய்யப்படும் தீங்கு எள்ளத்தனையும் உண்டாகாது’ என்று கூறினார் கதீஜா நாயகி.

நபிகள் நாயகத்திற்கு அல்லாஹூத் த ஆலாவின் அருள் கிட்டியதை முதன் முதலில் கதிஜா அவர்களே கண்டார்கள். கணவனுக்கேற்ற கருத்தொருமித்த மனைவியாகிய கதீஜா நபிகள் நாயகம் அறிவித்த வேத வாக்கியத்தைத் தீரத் தெளிய உணர்ந்து, நாயகததின் கைகளைப் பிடித்து கலிமா ஓதி, ஈமான் கொண்டு இஸ்லாமானார்கள். பெண்களில் முதலில் இஸ்லாமானது கதீஜா பிராட்டியே ஆவார்கள்.