பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209


"நறுமேனியி னசுமாவிட மிரவற்கொளு நளினச்
சிறுமெல்லடி மயிலாயிஷா களமீதினிற் சிறந்த
குறைவின் மணி நிறைமாலிகை குறியாதவண் வீழ்ந்த
தரைமீதினிற் நெறியாதினன் குடபாலினிற் சார்ந்தான்." [1]

சூரியன் மறைந்தபின் கழுத்திலிருந்ந மணிவடம் காணாத செய்தியை நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். நபிகள் நாயகமும், மற்றவர்களும் மணிவடத்தைத் தேடினார்கள். நெடுநேரம் தேடியும் அகப் படாமையால் "நாம் இன்றிறவு இங்கு தங்கி காலையில் மணிவடத்தைத் தேடி எடுத்துக்கொண்டுதான் போக வேண்டும்; எல்லோரும் தங்குங்கள்' என்று கட்டளையிட்டார் நபிகள் நாயகம்.

'வையத்தினின் வீழ்கின்றநன் மணிமாலிகைகண்ணி
னெய்தும்மள வுந்தோன்றிய விருட்போதவனிறுத்தார்
மெய்மைப்புகழ் நபிநாதரு மிகுசேனையுமப்பாற்
பையப்பய வவ்வெல்லியும் படக்கீழ்த்திசைவிளர்த்த," [2]

பின்னிரவில் விழித்திருந்த காரணத்தில் நபிகள் நாய கம் அவர்களுக்குத் தூக்க மயக்கம் வந்ததால் ஆபிஷா நாயகியின் மெல்லிய தொடையில் தலைசாய்த்துத் தாங் கினார்.

'தேய்கின்றதிவ் விரவும்வெளி தெரிகின்றது கதிரும் பாய்கின்றது கலனுங்கணிற் படுகின்றில பஜூறு


14

  1. 1.சீறா முறைசீக்குப் படலம் 34, 35
  2. 2.சீறா முறைசீக்குப் படலம் 34, 35