பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213


லறுத்தாள்குலத் தினத்தாரெனு மகப்பாசமுமியாவும்

வெறுத்தானபி மனைப்பாரியென்றுரைத்தாரெனும்விதத்தால்," [1]

அண்ணல் நபி (சல்) அவர்களின் அருமை இல்லாளாக அன்னை ஜூவைரியா ஆகிவிட்ட காரணத்தால், போர்க் கைதிகளாகப் பிடிபட்டு அடிமைகளாக்கப்பட்ட 600 எண்ணிக்கையுடைய பனுா முஸ்தலிக் கூட்டத்தினருக்கு விடுதலை அளித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட அபுயக்கரின் மகளாகிய ஆயிஷா அன்னை, ஜூவைரியாவிடம்,

"இகன் மன்னவர் சிறையெண்ணில தெல்லாமினிதுரிமை

மிகவெய்திய துன்னாலென’

எனப் புகழ்ந்தார்.

அன்னை ஜூவைரியாவின் பெண்மை நலம் அவர் இனத் தவருக்கு விடுதலையையும், நபிகள் நாயகத்தின் உறவுத் துணையையும் பெற்றுத் தந்தது.

செயினபு நாச்சியார் கலியாணப் படலம் ஒர் ஒரங்க நாடகமாகவே திகழ்கிறது. செயினபுவின் அழகு, அவர்கள் நபிகள் நாயகத்தைத் திருமணம் செய்து கொண்ட முறை, அன்னை செயினபுவின் பண்புகளால் பெண்களுக்குரிய ஒழுக்க முறையை திருக்குர்ஆன் விளக்கமாகக் கூறியமை யாவும் சேர்ந்து அப்படலம் ஒரு கருத்துக் கருவூலமாகக் காட்சி யளிக்கிறது.

நபிகள் நாயகம் (சல்) ஹிஜூறத் ஐந்தாம் ஆண்டிலே மதீன மாநகரத்திலிருக்கும் சஹஸ் என்பவருடைய மகளாகிய செயினபு என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பித் தூதனுப்பினார். ஆனால் அழகும், அன்பும் கற்பும், இறையருளும் நிரம்பிய பொற்புடைச் செல்வியாகிய செயினபு தூதரை நோக்கி,


  1. 1. சீறா. முறைக்குப் படலம் 57