பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215


கள் பலர் விடைபெற்றுச் சென்றனர். சிலர் மனை வாயிலில் நின்றிருந்தபடியால், செபினபு நாச்சியார் நாணி நின்றிருந்தார்கள். அப்போது,

"அப்படி யவரு நானுற் றகத்துளே யிருப்பமேலோன்

செப்பிய வாயத் தொன்று ஜிபுரயீல் கொணர்ந்திறங்கி

யொப்பிலான் றுாதர் முன்ன ருரைத் தவர்விண்ணிற் சேர்ந்தார்

தப்பிலாக் குணத்தின் றோழர் தங்களைத் தயவாய்ப்பார்த்தே "

கோதிலா தொசீவ னந்தின் றுவந்தனர் கூண்டிராது

போது க செயின பென்னும் பூங்கொடி மனது நாணி

யேதமுற் றிருந்த தாலே யிருநிலக் கிழமை பூண்ட

மாதர்க ளெவர்க்கு நாண மணியணிப் பூணாமென்றார்." [1]

அப்போது நபிகள் நாயகம் (சல்) அவர்கள் செயினபு நாணியிருப்பதால் இனி நமது மார்க்கத்தில் பெண்களெல்லாம் அந்நிய புருஷர்களுக்கு நாணி நிற்பதாகும்' என்ற வேதவாக்கியத்தை ஒதிக் காட்டினார்.

உயிரினுமினிய நாணத்தைக் காத்து நின்ற செயினபு நாச்சியாரின் பெண்மை நலம் வேத வாக்கியமாகத் திகழ்ந்த செய்தியை உமறுப்புலவர் காவியச் சுவையும் கற்பனை நயமும் தோன்ற சொற் சித்திரம் புனைகின்றார்.

இரண்டாவது கலீபாவாகத் திகழ்ந்த உமறுக்கத்தாபுவை ஈமான் கொள்ளச் செய்தவர் அவருடைய உடன் பிறந்தாள் பாத்திமா. நபிப் பட்டம் கிடைத்த ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்திலேயே நபிகள் நாயகம் தன் இறைப்பணியை நிறைவுறச் செய்யத் துணைவேண்டி இறைவனை வேண்டினார்.


  1. 1. சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 23