பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

‘உலகினில் கருதலர்க்கு அடலரி உமறினைக் கொடு
அலது அபூஐலினைக் கொடு’

என்று மனமுருகி இரந்து கேட்டார். ஆனால் அபுஜகிலோ நபிகள் நாயகத்தைக் கொல்ல உமறையே தேர்ந்தெடுத் தனுப்பினான். கையிலேந்திய வாளொடு சென்ற உமறைச் சிந்திக்க வைத்து வழியில் அவரை எதிர்த்து வந்த காளை. எனினும் அபூஐகிலும் அவன் கூட்டத்தினரும் முகம்மது செய்த மாயமே அக் காளை, அவனைக் கொன்று வருக என்றனுப்பினர்.

தொடர்ந்து கொலைக் குறிக்கோளுடன் சென்ற உமறுவை - நுஜமுபது அப்துல்லா கண்டு முகம்மதை வெட்டுமுன் உன் குடும்பத்தைச் சீர்திருத்தும் என்று தூண்ட, உடன்பிறந்தாள் பாத்திமா இல்லம் சென்றார் உமறு. பாத்திமாவும் அவர் கணவர் சயீதும் இஸ்லாமைத் தழுவி இருந்தனர். கப்பாப் என்பவரைத் தன் வீட்டில் வைத்து வேத வாக்கியங்களைப் பாடம் கேட்டு, மார்க்க முறைகளைக் கற்று வந்தனர். வழக்கம்போல் கணவனும் மனைவியும் பாடம் கேட்க அவ்வொலி கேட்டு சீற்றமடைந்த உமறு பாத்திமாவை கடும் சொற்களால் ஏசி, அங்கிருந்த தண்டாயுதத்தால் பாத்திமாவை நெற்றிக்கு மேலடித்துக் காயப்படுத்தினார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. எனினும் ஆன்ம உறுதி மிக்க பாத்திமா உமறுவின் கையில் வேத வாக்கிய ஏட்டைத் தர மறுத்துலிட்டாள். உமறுவின் வாள்வன்மை, உடல் வீரம் ஒன்றும் பயனில்லாது போயிற்று. தூய வேத வாக்கிய ஏட்டை தொடத் தூய்மை வேண்டும். சத்திய வேத வழியை விட்டு விலகியவர் சுத்த மில்லாதவர். நீயும் போய் சுத்தம் செய்து கொண்டு வா! எனறு கட்டளையிடுகிறார் பாத்திமா.

உடன்பிறந்தாள் ஆணைப்படி. உடற் சுத்தம் செய்து கொள்ளப் புகுந்த வாவியின் சிறப்பையும், உமறு நீராடிய சிறப்பினையும்,