பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217

"மன்னவ லாபுல்கா சீந்தன் மனத்தெளி வதனின்மிக்கவாய்
பன்னருஞ் சிறப்பு வாய்க்க பங்கய வாவிநண்ணித்
தென்னுறு கதிர்வேற் சிங்கஞ் திருநீ ராடினாரால்," [1]

"புனைந்தமென் றுகிலை நீத்துவேறொருபுதிய தூசும்
வனைந்தகம் புனித மாக்கி வாவியன் கரையை நீக்கிச்
சினந்தங்கு கதிர் வேற் கண்ணா டிருமனை புகுந்துநீவிற்
நினைந்தவை முடித்தே னியானு நிகழ்க் திய தருள்க வென்றார்." [2]

சிற்றிடைப் பெரிய கண்ணாராகிய பாத்திமா, உமறுவிடத்தில் அந்தமிலாதி சொற்ற ஆயத்தும் பொருளும் தீஞ்சொற் சிந்து பத்திரத்தை ஈந்தார்.

உமறுகத்தாபு ஏட்டினை வாங்கிப் பார்த்தார்.சித்திர வரியிலொன்றைத் தெளியுறத் தேர்ந்து வாசித்தார்.மறைமொழிப் பொருளை உணர்ந்தார். 'மானுடர் மொழி யீதன்று' எனத் தெளிகின்றார். அவர் இதயத்திலிருந்து 'குபிர்' என்னும் இருள் அனைத்தும் அறத்தொலைந்தது;'தீன்’ என்னும் பிரகாசம் புகுந்தது; புறத்தே அகத்தழகு ஒளி விட்டது.இதோ கவிஞர் உமறு காட்டும் புரவலர் உமறு!

"நிறைநிலை மனத்த ராகி நினைத்தவஞ் சகத்தைபோக்கிக்
குவைபடுங் குபிரைச் சூழ்ந்த குலத்தொடும்வெறுத்து நின்றார்" [3]

"வழிபிழைத் திருளில் முட்சார் வனத்திடைக்கிடந்துள் ளாவி
கழிபட விடைந்தெற் றோன்றுங் காலைநன் னெறிபெற்றோர்போ


  1. 1.சீறா, உமறுகத்தாபு கொண்ட படலம் 71, 73, 76,
  2. 2.சீறா, உமறுகத்தாபு கொண்ட படலம் 71, 73, 76,
  3. 3.சீறா, உமறுகத்தாபு கொண்ட படலம் 71, 73, 76,