பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225


யின்றித் திரியும் எங்கள் துன்பம் துடைத்து, மக்கள் மனத் துயர் மாற்றி, அவர்கள் முகவாட்டந் தீர்த்த நாங்கள் எப்போதும் போல வாழ வழி வகுக்க வேண்டுமென்று வேண்டி நின்றாள்.

"பண்டு போல் வாழத் தந்திர முளவோ என்ற கவுலத்துக்கு 'எம்மாற் கூட்டுதலரிய' தென்றார் நபிகள் நாதர், அச்சொற்கள் கவுலத்தின் அகமகியினுள் புகுந்து வருத்த, மக்கள்தமைப் பார்த்து வாய் திறந்து அழுது நொந்தாள் அல்லாஹூத்த ஆலாவை எண்ணி தூ ஆ இரந்து இரங்கி அழுதாள்.

நபிகள் நாயகம் நீராடிக் கொண்டுதான் இருந்தார். கவுலத்தும் அழுது புலம்பி துவா இரந்து கொண்டுதான் இருந்தாள். அந்த வேளையில்,

"ஒப்பிலா னருளி னாலே யும்பரி னிருந்து நீதி

செப்பிய வாயத் தொன்று திகமுற விறங்கிற் றன்றே."

என்று உமறு பாடுகின்றார்.

உடனே கவுலத்திடம் அவுசை அழைத்து வரச்செய்து நபிகள் நாயகம் வேத வாக்கினை விளக்கிச் சொன்னார். ஒரு கணவன் கோபத்தில் மனைவியைத் தாயென்று கூறினால் 1) அவன் ஓர் அடிமையை விலைக்கு வாங்கிட உரிமையாக விட்டுவிட வேண்டும். அதற்குத் தக்க பொருளில்லாவிடில் (2) அறுபது நாட்கள் இடைவிடா நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் உடல் வலிமை இல்லையெனில் (3) இரவலர் அறுபது பேரை அழைத்து தலைக்கொருபடி தவசம் தானியங் கொடுக்க வேண்டும். இம்மூன்றிலொரு செயல் செய்தால் தாயென்ற சொல் தவிர்ந்து போகும். பின் அவளோடு சேர்ந்து வாழலாம்" என்பது அல்லாஹாத் தஆலாவின் மறைமொழி.

15