பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226


அதைக்கேட்ட கவுலத்து 'ஆளடிமை கொண்டு உரிமையாகி விட நிதி சிறிதுமில்லை; சூழுடன் விரஞ் செய்யக் கணவனோ துன்புறு கிழவன்; எந்த நாளினும் இரப்போர் கையில் தவசமே நல்க வேண்டுமாயின் வகை வேறு இல்லை' என்று குறையிரந்து கூறினாள். நாட்டு மக்களை உய்விக்க வந்த நபிகள் நாயகம் "நாமோர் பறைநிறை நின்ற வீத்தம் பழமுனக் கீதும்" என்றார்.

"ஆசிலா கற்பின் மிக்க அரிவை கவுலத்து நபிகள் நாயகம் ஈந்த ஈத்தம் பழத்தினைப் பெற்றுச் சென்று கழுவாய் செய்து 'நேச நாயகனுடன்' செழுமனையிடத்துச் சேர்ந்து வாழ்ந்திருந்தாள்.

மக்கள் தம்மையறியாமல் ஆத்திரத்தில் கூறும் சொற்களால் இல் வாழ்க்கையே அழிந்து போகாமல் நல்வாழ்வு அளிக்க இறையருளால் வகை செய்தார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

வாழும் வகையினை வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகத்தின் இந்த அருட்செய்கை மக்களுக்கு அறிவுணர்வை-அன்புணர்வைத் தூண்டுவதாயமைந்துள்ளது.

உமறுவின் கற்பனைத் திறனும், கருத்துத் தெளிவும் உணர்ந்ததைப் பிறருக்கு உணர்த்தும் உரனும், பெண்மை நலம் பாராட்டும் பெற்றியும் கற்பாருக்கு இன்பம் பயப்பன. பெண்களுக்கு இயல்பாயிருக்க வேண்டிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய பண்புகளை நலமுற அமைத்து, புனித நாயகனை உருவாக்கி உலக மக்களை உய்விக்கச் செய்த திருப்பணியில் தாய்க்குல மகளிரையும் பங்கு பெறச் செய்து, பெண்களுக்கு உமறு தரும் உயர்வு இலக்கிய நயம் நிறைந்தது.