பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீறாவில் இயற்கை கடந்த செயல்கள்

தக்கலை எம். எஸ். பஷீர், M.A., B.Sc , B.Lib.

வையத்தின் கண் வாழையடி வாழையாக தோன்றிய இறைத் தூதர்கள் (நபிமார்கள்) அனைவரும் இயற்கை கடந்த செயல்களை- அற்புதங்களை ஆற்றியவர்களாகவே இலங்குகிறார்கள்1. ஆண்டவன் அருளால் ஆற்றிய இவ் அற்புதங்களை 'நபித்துவத்தின் சான்று', 'அடையாளம்’ ‘விளக்கம்', 'காரணம்’ என்பர். இதனை 'தெய்வீக நிகழ்ச்சிகள்' என்றும் உரைப்பர். தாம் இறைத் தூதர் என்பதனை நிறுவுவதற்கும் இத்தகு காரணங்கள் அத்தாட்சி பகருகின்றன. அற்புதங்களை அரபு மொழியில் மூஃஜிஸாத்து, ஆயாத்து, கராமத்து, முஜய்யிதாத்2 என அழைப்பர். திருக்குர்ஆனில் 'ஆயாத்து' = அத்தாட்சிகள் என்றே கூறப்படுகிறது. ஐம்புலன்களுக்குத் தெரியும் அற்புதங்களை அரபி யில் 'கர்குல் ஆதாத்து" என்பர். 'இயல்புக்கு மாறானது' என்பது இதன் பொருள். தமிழில் அதிமானுட நிகழ்ச்சி கள், இயற்கை இறந்த நிகழ்ச்சிகள். எல்லை மறிய நிகழ்ச்சிகள், இயற்கை கடந்த ஆற்றல்கள், இயற்கை கடந்த செயல்கள், மனித எல்லைக்கு அப்பாற்பட்ட கூறுகள், மீமானிட நிகழ்ச்சிகள், இறையியற் செயல்கள் என்றெல்லாம் கூறுவர். மீமானிட நிகழச்சிகள் என்பது மிகப்


1. (அ) ஹிஸ்புல்பஹர் ... நபிமார்கள் ஆற்றிய சில அற்புதங்கள். பக் 30 முதல் 31 வரை.

(ஆ) சாந்தி மார்க்கம் ... மூஸா நபியின் 8 அத்தாட்சிகள் பக் 288-289 (மெளலவி முஹம்மது பஸில்)

(இ) "அஸா'வில் (மூஸா) நபியின்) எழுபது முஃகிஸாக்கள் இருந்தன’’ இப்னு அப்பாரஹீம் ஸ் (றலி)

(உ) திருக்குர்ஆன் 3-36; 27-37; 18-17, 2-66

2. இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் (இரண்டாம் பாகம்) அப்துற் ரஹீம் MRM