பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233


மானார் பிறப்பதற்கு முன்னறிவிப்பான அற்புதம் என்று கூறப்படும் இவ்வியற்கை கடந்த நிகழ்ச்சியினையும் உமறுப் புலவர் காட்டியுள்ளார்.

அலிமா முலையூட்டுப் படலம்

விலங்கினங்களும் பறவைக் கூட்டங்களும் வானோரும் உம்பர் மகளிரும் முகம்மது நபிச் சேயினைப் பாலூட்டி வளர்க்கத் தம்மிடம் தரும்படி இறைவனை இரந்து கேட்டதாகக் கூறப்படுகிறது.

அலிமா என்னும் மடந்தை அன்றி நபி பெருமானுக்கு வேறெவரும் பாலூட்டல் தகாது என்பதே இறைவன் அளித்த பதிலாகவும் (முதல் 5 வரை) உமறுப்புலவரால் தரப்படும் இயற்கை மீறிய செய்தியாகும்.

ஆரிது- அலிமா தம்பதிகள் இல்லத்தில் ஆடுமாடு, ஒட்டகங்கள், பஞ்ச நெருக்கடியினால் அரைக் கிழடும், சொறியும், மலடும், நடக்க இயலாததும், வரடும் வங்குமாயிருந்தன. ஆமினா திருமகவான முகம்மது (சல்) குழந்தை தம் இல்லத்திற்கு வந்த பின், மகவு முகம்மதுவின் திருக் கரங்களை தமது கரங்களினால் எடுத்துச் சிறப்பாகத் தடவ, அதனால் அவ் ஆடுமாடு ஒட்டகங்களின் குற்றம் குறைகள் நீங்கி அழகு பெற்று விளங்கின. பாலைச் சுரந்து பொழிந்தன. வளமும், செல்வமும் நிறைந்தன என்கிறார் உமறுப் புலவர். இதனை இமாம் பர்சன்ஞ்சி மெளலூதும் பகரு கிறது.

குனைன் மக்களுக்கு துன்பங்கள் துயரங்கள் வந்துற்ற பொழுதும் தாமரைப் பூ போன்ற முகம்மதுவின் பாதம் பணிந்து முத்தியிட்டதால் அவை அகன்றன (18,79) என்கிறார்,

முகம்மதைக் காணில் வறுமை, நோய், கவலை, சிறுமை, தீவினை, பகை, பாவம் முதலானவை நீங்கும் (13 ). புத்தி செல்வம், தேக பூரிப்பு முதலானவை உண்டாகும் என்று பாடுகிறார்.