பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234


நபி பெருமானாரின் அடையாளங்களில் சிலவற்றினை 80, 81 பாடல்களில் தருகிறார். அவைகளாவன: முகம்மது (சல்) வின் சரீரத்தில் தூசி ஒட்டாது. நீரால் கழுவாதிருந்தாலும் மேனி கஸ்தூரி மணம் கமழும், சலமலாதிகளின் நாற்றமுந் தோற்றமும் தோன்றுவதில்லை. சரீர நிழல் தோன்றாது.பாதம் தரையில் தெரியாது. எறும்பு ஈ உடலைத் தீண்டது. இவையெல்லாம் இயற்கை மீறியவைகளன்றோ!

சுரதித்தி புனலழைத்த படலம்

ஷாம் நாடு செல்லும் வழியில் வறண்ட பாலை நிலத்தின் கண் நீர் பெறாது வாடி வதங்கிய தமது குழாத்திற்கு முகம்மது (சல்) நீருற்றைத் தோற்றுவித்த அற்புதம் இப் படலத்தில் இயற்கை கடந்த செயலாகக் கூறப்படுகிறது.

சுரசித்தி வதைப் படலம்

ஷாம் நாடு செல்லும் பாதையில் பெரிய மலைப்பாம்பு ஒன்று குறுக்கிட்டு துன்பம் விளைவித்தது. வணிகர்கள், பிரயாணிகள் எல்லோரும் மருண்டு வந்தனர். துரும்பொரு கை முழ முண்டெழில் முகம்மது எடுத்து வீசிட,

'அடிபட்டட வித்திர ளத்தனையும்
பொடிபட்ட துருண்டு புரண்டுவயின்
மடிபட்டொரு கற்குவை வாயினிடைக்
கடிபட்டது பட்டது கட்செவியே."[1]

என மலைப் பாம்பினை மாய்த்தார் என்று அற்புதம் இப் படலத்தில் பேசப்படுகிறது.

நதி கடந்த படலம்

ஷாம் நாடு போகும்போது இடையே ஒரு நதி குறுக்கிட்டது. அஞ்ஞான்று அமரர் ஜிப்ரயீல் முகம்மதுவின் கனவில் தோன்றி, நாளை விடிந்ததும் இவ்வெள்ளத்தின்


  1. 1. சீறா பாந்தள் வதைப் படலம் 22