பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236


தொழுவதே அவர்கள் அனுபவிக்கும் இன்பம்; வேறுபட்ட உருவத்தில் வேறுபட்ட ஆற்றலுடன் அவர்கள் படைக்கப் பட்டுள்ளனர் என்று அறிந்து கொள்ளுங்கள்" என 'அராபிய இரவுகள்' எனும் கதைத் தொகுப்பை பதிப் பித்த லேன் என்பவர் தன் முன்னுரையில் கூறியுள்ளார்.

பாந்தள் வசனித்த படலம்

பெருமானாரின் ஷாம் நாடு பயணத்தின்போது வழியில் ஒரு பெரிய மலைப்பாம்பு குறுக்கிட்டது. அப்பாம்பினைத் தொலைப்பதற்கு முகம்மது (சல்) சென்றபோது அது வாய் திறந்து சலாம் கூறி, இறைவனின் இருதி நபியவர்களைக் கண்ணாரக் கண்டு களிப்பதற்கு காத்திருந்ததாகப் பேசியது. பின்பு புனிதர் முகம்மது (சல்) அப் பாம்பினை நோக்கி இவ்விடம் விட்டு நீங்கி மலைப்பகுதிகளிலோ கானகத்திலோ வாழுமாறு பணித்தார்கள் பெரிய பாம்பும் அங்ஙணமே கலிமா மொழிந்து அடவி நோக்கிச் சென்ற விபரம் சொல்லப்படுகிறது.

இசுறா காண் படலம்

இசுறா மனையின் கண் அமைந்த பாழுங்கிணறும், கரிந்த கட்டை (பேரீந்தின் குற்றி)யும் பெருமானாரின் நுழைவினால் ஏற்பட்ட ஒளி கண்டு, பாழுங்கிணறு குமிழிவிட்டு பெருநீர் சுரந்து நதியென வழியவும், பேருந்தின் கரியகுற்றி குருத்து விட்டு ஓங்கி வளர்ந்து பாளை விரித்து பூச் சிந்திக் காய்த்து மென்கனி தந்தது என (33 முதல் 35 வரை) காட்டுகிறார் உமறுப்புலவர்.

கள்வரை நதி மறித்த படலம்

புனிதர் முகம்மது (சல்) அவர்தம் வியாபாரக் குழாமும் பண்டித மணி இசுறாவின் சோலையை விட்டு ஷாம் நாடு செல்லும் வழியில் ஒரு மலையடிவாரத்தை அடைந்தார்கள். அங்கு திருடர்கள் தொல்லை உண்டு என்பது கேட்டு, புனிதர் முகம்மது தம் வியாபாரக் குழுவினை பயமறச்செய்து வழி