பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237


நடத்திச் சென்றார்கள். புனிதர் முகம்மது (சல்) கண்ட நற் கனவின் படியே ஒரு பெரிய ஆறானது அவர்களைச் சூழ வந்த கள்வர்களை வழிமறித்து அனுகவிடாமல் செய்த அற்புத நிகழ்வு இப்படலத்தின் கண் காணப்படுகிறது.

கரம் பொருத்து படலம்

ஷாம் நகரத்தில் சிலர் புனிதர் முகம்மதுவின் (சல்) குழாத்தினர் கொண்டு வந்து விற்பனையாகாத பொருட்களை விலை பேசி பெற்றுக் கொண்டனர். உரிய தொகை பெறுவதற்காக நாயகத்தை தங்கள் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். வஞ்சகர்கள் நயமாக வரவேற்று வாழ்த்தி அமரச்செய்தனர். அந்கக் கட்டடத்தின் மேல்மாடிபில் புனிதர் முகம்மதுவின் தலைக்கு நேராக விழும்படி முன்கூட்டி ஏற்பாடு ஆகியிருந்த கல்லைத் தள்ளுமாறு ஒருவனுக்கு சாடை காட்டினார். ஆனால் அவன் அவ்வாறு தள்ளவும் அக் கல் கீழே விழாமல் அவன் கரத்தினை கெளவிப் பற்றிப் பிடித்து நெறித்து; இறுக்கியது. அவனைத்தேடிச் சென்றோரும் முயன்றும் பயனில்லாது. "சொல்லொ னார்யிது பதைத்திட வுட றுடி துடிப்பக் கவ்வி னுட்புக வற்றன லவன்மணிக் கரங்கள்" [1] என அவன் இரு மணிக்கட்டும் நீங்க கரம் அறுபட்டது. விவரம் அறிந்ததும், பெருமானாரிடம் அவர்கள் அனைவரும் இறைஞ்சிப்பிழை பொறுத்தருள வேண்டினர். அக்காபிர்களை மன்னித்து,

"கரிய கல்லினிற் பதிந்திடுங் கரத்தினின் கரத்தைத்

தெரிய வைத்திடென் றோதிய மொழியினைத் தேறிச்

சொரித ருங்குரு திகளொடுந் துடுப்பெனுங் கரங்க

ளரிதி னீட்டியே தொட்டிட வொட்டின வன்றே." [2]


  1. 1.சீறா மரம் பொரு த்து படலம் 48, 63
  2. 2.சீறா மரம் பொரு த்து படலம் 48, 63