பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242


விவிை நின்றார். பெருமானார், இப்னு அப்துயாலின் குபிர்க் கொலைத் தொழில் மனத்தினை விடுத்திட்டு, இக்கணத்தில் வழிபடார் எனில் இவரும் இவர்தம் கூட்டமும் பின்னர் நல்வழியில் ஒழுகுவர்; மறையும் 'தீன்' வழியும் பரப்புவர் என்றார். இது கேட்ட அந்த அமரர் அந்த இடத்தினை விட்டு நீங்கினார் என்பதைத் தரும் படலம் இது.

ஜின்கள் ஈமான் கொண்ட படலம்

கர்னுதாலிப் எனுமிடத்தை விட்டு நகுலா எனுமிடத்தில் நாயகம், அந்திப் பொழுதில் வந்தடைந்தார்கள். அன்று இரவில் ஜின்கள் கூட்டம் கூட்டமாக வந்து பெருமானார் அவர்களை கண்டன. பெருமானார் வேரொடு மரம் எழுந்து வந்து பேசிய பின் தன்னிருப்பிடம் செல்ல வைத்ததைக் (31, 32) கண்டு ஜின்கள்1 ஈமான் கொண்டு இஸ்லாத்தை தழுவிய அற்புதம் கூறுவது இப்படலம்.

காம்மாப் படலம்

காம்மா என்பவன் எத்தனையோ ஆண்டு காலத்திற்கு முன், எவராலோ கால் கட்டப்பட்ட நிலைக்கு ஆளாகிவிட்டவன். அவன் பெருமானார் அவர்கள் திருமுன் வந்து முறையிட, அண்ணல் முகம்மது (சல்) அவர்கள் ஹஸ்ரத் அலி (றலி) அவர்களைக் கொண்டு காம்மாவினுடைய கால் கால் களைத் தறித்து விட்ட அற்புதம் இப்படலத்தில் கூறப்படுகிறது.


1. ஜீன் என்பது என்ன? யாது? என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும், ஜின்... என்பதன் மூலம் 'ஜன்ன' என்பதாகும். 'எஜின்னு' என்பதன் பொருள் மறைக்கப்பட்டிருத்தல் அல்லது மறைத்தல் என்பதாம் சாதாரணமாக ஜின்கள் கண்களுக்குத் தென்படுவதில்லை என்ற கருத்தும் உண்டு. ஜின்களில் நல்லவைகளும், கெட்டவைகளும் இருக்கின்றன. 'ஸீரா அன்னாஸ், நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்களைப் படைத்தான்' ...திருமறை, 'இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு ஜின்களில் சிலரை நாம் (நபியே!) உம்மிடம் வரும்படிச் செய் தோம், பின் தங்கள் இனத்தவரிடம் அவர்கள் சென்று அச்சமூட்டி எச்சரிக் கை செய்தனர்'

...திருமறை.