பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

ஊட்டி வாழ்த்தனர் எனும் இப்பாடலின் தொனிப்பொருளையும் இனி விளக்கமாகக் காண்போம்,

பேரறிவுப் பெட்டகம் பாத்திமா (ரலி) வின் திருமணக் கோலம் மாறவில்லை. ஒர் ஏழைப் பக்கீர் வந்து பசிக்க உணவும், குளிர் தாங்கப் போர்வையும் கேட்கிறார் பாத்திமா (றலி) அவருக்கு உணவளித்துப் புதுப் போர்வையும் கொடுத்தனுப்பினார் பக்கீர் போனதும் நபிகள் நாயகம் அபூபக்கர் (ரலி) உயர்(ரலி)முதலியவர்களுடன் வருகிறார்கள் தம் மகள் பழைய போர்வையுடன் காணப்படுவதைக் கண்டு காரணம் சேட்கிறார்கள். ஒரு பக்கீருக்கு தந்தேன் என்கிறார் பாத்திமா (ரலி). புதியதை மணக் கோலத்திற்கு வைத்துக் கொண்டு பழையதைக் கோடுத் திருக்கலாமே என மீண்டும் வினாவுகிறார்சள் நபிகள் நாதர். அழகிய பொருள் எதையும் அல்லாஹ்வுக்குக் கொடுக்கத் தயங்கலாகாது என்று தாங்கள் தான் வேதவாக்காகக் கூறினிர்கள். அதன்படி ஒழுகினேன் என்கிறார் பாத்திமா (ரலி).

"அழகியது எவையும் அல்லாஹ்வுக்காகவே
விழைவுடன் கொடுத்திட வேண்டு மென்றுதும்
பழமறை வாக்கினாற் பகிர்ந்ததால் அரோ
மழைதவழ் கொடையனீர் வழங்கினேன் என்றார்."[1]

இங்கு பக்கீருக்கு செய்த தானம் அல்லாஹ்வுக்கு செய்ததாகவே கூறப்படுகிறது. கடவுளை நான் தலித்திச் நாராயணனாகவே தரிசிக்க விரும்புகிறேன்’ என்ற காந்தியடிகள் கூறியிருப்பதை ஒப்பு நோக்குக. என்னே கருத்தாழம்.

தாய்க்குலத்தை அறத்தின் வடிவாகக் காண்பது தமிழர் தம் மரபாகும், உமறுப்புலவரும் உத்தமப் பெண் மணிகள் அறம் வளர்த்ததை அழகுறப் போற்றுகிறார். ஒரிடத்து வைக்கப்பட்ட விளக்கொளி பலவிடங்களிற் படர்ந்து பொருள்களை விளக்குதல் போல ஒரு:சொல் ஓரிடத்து நின்று செய்யுளிற் பல விடத்து நின்ற சொற்களோடு பொருத்திப்


........................

  1. 1. சீறா பாத்திமா திருமணப் படலம் 206