பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247


கொடுக்க விழைந்தார். பெருமானாரிடத்துச் சொன்னார் அவர்களும் 'வெண்ணினத் தசையொடு நுவணியுஞ் சமை யாதாங்கு வைத்திரு! என்றார். பின்பு பல்லோரோடு பெருமானார் சென்றார்கள், சென்று கோதுமை மாவினையும் இறைச்சினையும் கொணரச்செய்து தொட்டு, பின் சமைக்கச் சொன்னார்கள். ரொட்டிச் சுடச் சுட அதிகமாயின. இறைச்சியும் அதிகமாயின. உண்பவர்களுக்கு கொடுக்க கொடுக்க உயர்ந்தன. எடுக்க எடுக்க பாத்திரம் நிரப்பமாகிக் கொண்டிருந்தன எனும் அற்புதம் அறியத் தருகிறார். விருந்து விமரிசையாக நடைப்பெற்தது பின் நாயகம் சாபீ றிடம் விருந்து கொடுத்த ஆட்டின் கொம்பு, தோல், குளம்பு முதலியவற்றினை எல்லாம் கொணரச் செய்து, இறையருளால் நீயிவன் எழுந்திட என்றுரைத்தர்ர்.

"துண்ட மாகிய தொன்றென பொருந்தியூன் றோய்ந்து

பண்டு போலெழு மூயிரும்வந் துடலினிற் பரப்பக்

கண்டி யாவரு மகிழ்வுறக் காலினை மடக்கிக்

கொண்டே ழுந்து முன் குதித்தது."[1]

அந்த ஆடு எனும் அற்புதமும் தரப்படுகிறது. (இச்செய்தி 53 முதல் 77 வரையுள்ள பாடல்களில் காணலாம்).

உகுதுப் படலம்

உகுதுப் போரில் கத்தாதா (றலி) அவர்கள் தனது வலது கண்ணை இழக்க நேரிட்டது. பெருமானாரிடம் சென்று இறைஞ்சி முறையிட்டார். அப்பொழுது பெருமானார் அல்லாஹூ அருள் வேண்டி தமது திருக்கரங்களால் தொட்டுத் தடவி ஒளி பெறச் செய்தார்கள் (165 முதல் 175 வரை) எனும் அற்புதம் காணலாம்.

இப்போரில் அப்துல்லா எனும் வாட் போர் வல்லார் தனது, வாளை இழந்து நிற்குங் காலை, பெருமானார் பேரீத்

  1. 1. சீறா கந்தக்குப் படலம் 74