பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249


முகம்மது (சல்) அவர்கள் ஒட்டகத்தினருகே சென்றார்கள். அவ் ஒட்டகம் வாய் திறந்து பேசிய அற்புதம் இப்படலத்தில் கூறப்படுகிறது.

மழையழைப்பித்த படலம்

ஹிஜ்றி ஆறாவது ஆண்டு வெள்ளிக்கிழமை அஸ் ஹாபி மார்களோடு சூழ இருந்த கீர்த்தி சேர் வள்ளல் நபி அவர்களிடம் கூர்ந்த சீர் அஸ் ஹாபிமாரில் சுலைக் என்பவர் மழையின்றி வாடும் "மாரி நீர் வறந்தசோலை மரம் இலை உதிர்ந்த மிச்க பாரினில் எழுந்த பைங்கூழ் பசையறக் கருகிக் கானல்’’ ஆகிய நிலையினையம், 'மருத நன் நிலமும் பாலை வனமென உலர்ந்து' "நின்ற நிலையினையும் இன்னோரன்ன வறண்ட நிலையினையும் கொடுமையினையம் கூறுவதாக (3 முதல் 8 பாடல்களில் உமறு விவரிக்கின்றார். திரு நபி இரங்கிப் பாரினில் மழையின்றி வாடும் வருத்தங்கள் நீங்க வேண்டி மனத்தினில் கிருபை மீறிப் புருக்கான் வேதப் பொருளினை எவரும் உள்ளத் திருத்தி அரும் ஒளியை உன்னி நிறை செழுஞ்சுடரை இரந்து, இருகை ஏந்தி மழை பொழிந்திடக் கிருபை செய்தார் ஆதியின் அருளினான "அலையொடு தழுவிச் சூள் முதிர்ந்தெழுந்த அழுகுற விளங் கியது மாரி' என்றும் மேலும் பெருமழை பெய்ததனை (14 முதல் 18) பாடல்களில் காட்டுகிறார். இருபது தினங்களாக பெய்த பெருமழையால் துன்புற்றதனால் மழையை நிறுத்துமாறு மீண்டும் பெருமானாரிடம் துஆச் செய்ய வேண்டி நின்றனர். நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆச் செய்திட பெருமழையும் நின்றது. இவண் பெருமானார் மழையழைப்பித்த-நிறுத்திய நிகழ்ச்சி இயற்கை கடந்த செயலாகத் தரப்பட்டுள்ளது. (புகாரீ ஹதீஸ்)

அந்தகன் படலம்

இருவிழிப் பார்வை அற்ற ஒருவனுக்கு பெருமானார் அவனை இறையிடம் தொழுது இறைஞ்சி வேண்டுமாறு பணிந்து அவனுக்கு விழிபெற்றுத் தந்த அற்புதம் கூறப்படுகிறது.