பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250


கடுநோய்வாய்ப்பட்ட ஒருவன், (நோய் விவரணை 12, 13, 4, 5) பெருமானாருக்கு தூது அனுப்பினான். அண்ணல் நபி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதனைக் கொண்டு போய் கொடு என அனுப்பினார்கள் (17) அது அவனுக்க உயிர் தரும் மருந்தாக உதவிய அற்புதம் பகரப்படுகிறது

இங்ங்னமாக சீறாவில் பெருமானாரின் அற்புதங்கள் பல பேசப்படுகின்றன. "கொடிய மிருகங்களும் மரங்களும் நபி பெருமானாருக்கு வணங்கியது, அழைப்புக்கு இசைந்தது' ஸ்லாம் சொன்னது சாட்சியும் பகர்ந்தது" என சுப்ஹான மெளலூது பகரும் பாமொழியும் படித்தறிதற்குரியது. இங்ஙனமாக மனிதர்களும் ஜின்களும் மட்டுமின்றி அஃறிணைப் பொருட்களும் பெருமானாரின் மூலம் கலிமாவின் உயர் வினை உணர்ந்து நேர்வழி பெற்றுத் திகழ்வதை உமறு பலவிடத்தும் காட்டுகின்றார்.

சீறாவின் ஜிபுறயில் (அலை)

வானவர் 2

'மலக் எனும் அறபுச் சொல்லுக்கு 'மலாயிக்கத்து மார்-வானவர் அல்லது தேவதூதர் எனப் பொருள் பகரலாம். வானவர்கள் ஒளியினின்றும் படைக்கப்பட்டவர்கள். ஆண் பெண் அற்றவர்கள். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள், வானவர்களுண்டு என நம்புவது ஈமானின் உறுப்புக்களுள் ஒன்றாம் 3


1. 'காந்தியினொலி இலங்குகத்தவன் ஜிபுரீயில்" 16

-திருநெறிநீதம் 459

2. "ஒளிவினால் படைக்கப்பட்டவர்கள் மலாயிக்கத்துமார்கள் என்று நம்பப்படுகின்றனர், அவர்களுக்கு உயிருண்டு; பேச்சு வன்மை உண்டு; பகுத்தறிவுண்டு இன வேறுபட்டால் அவர்கள் ஜின் (பூதங்) களையும் சைத்தான்களையும் விட வேறுபாடுடையவர்'

3. ஆமன்து பில்லாஹி வமலா இகத்திஹி