பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251


மலக்குகளின் பெயர்களை "ஜவாஹிறுல்ஹம்ஸா’’ எனும் நூல் தொகுத்துரைக்கின்றது,1

சைத்தான் II, III, IV, V, VII, VIII, XIV, XVI,

XXII, XXV, XXXIV, XLIII

மலக்குகளைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிப்பர். அவர்களுள் நால்வர் தலைசிறந்தவர்கள். அவர்களைக் 'கறுபியூன்' என அறபு மொழியில் வழங்குவர். ஆங்கிலத்தில் Arch Angel எனறு அழைக்கப்படுவர் வானவர் கோன் ஜிபுரயீல் (அலை) இஸ்றாபீல், மீகாயீல், இஸ்ஜயீல் மிக முக்கியமானவர்களாகும். இவர்களெல்லாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட-மீறிய பாத்திரங்களாவர். மீமானுட பாத்திரங்களாவர்.

செந்தமிழ்ச் சீறாவில் வானவர்கள் (மலக்குகள்) வானவர்கோன் ஜிபுரயீல் (அலை) முக்கிய வானவர்கள் சிலர் இயற்கை மீறிய பாத்திரங்களாக வருகின்றனர். ஜிபுரயீல் (அலை) நபிபெருமானாரோடு பல தடவை தொடர்பு கொண்டதனைச் சீறா செப்புகின்றது. உண்மையும் அது வன்றோ!

பதுறுப் போரில் பெருமானாருக்கு உதவிபுரிய ஐயாயிரம் மலக்குகள் பஞ்சகல்யாணி குதிரையில் அமர்ந்து பொன்னிறக் கரையுடைய தலைப்பாகை அணிந்து படைக்கருவிகளையும் தாங்கி விண்ணிலே வந்து தோன்றினார்கள் என பதுறுப் படலத்தில் (22) உமறு கூறுகிறார்.

ஜிபுரயீல் (அலை). மீகாயீல் (அலை) இவர்களிருவரின் உருமாறி வந்த வருகையின் வல்ல தன்மையினை வல்லாங்கு "இலாஞ்சனை தரித்த படல'த்தில் காட்டுகிறார் உமறு.

1 . இஸ்றபீல், இப்றாஈல், கல்கால், தர்தாஈல், துர்பாஈல், றப்தமாஈல், ஷர்க்காஈல், தங்கள்ஈல், றுயாஈல், ஷிலாஈல், ஹம்வாக்கீல் இத்றாஈல், அம்வாக்கீல் அம்றால் அஸ்றால் மீகாயில் மஹ்காஈல் ஹர்த்தாஈல் அதாஈல் நூறாஈல் நூ எல்......... ஜவாஹறுல் ஹம்லா