பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252


வரலாற்று நாயகர் வள்ளல் நபியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக முக்கிய நிகழ்ச்சியாம் அது.

இலாஞ்சினை (முத்திரை) பதித்தல்

குனைன்பதி கானகத்தில் அலிமா இளமைநிறை முகம்மதுவினை இளஞ்சிறார்களான தோழர்களுடன் ஆடுமேய்க்க அனுப்பிவைட்பது நாளும் வழக்கம் அன்றொருநாள் உகா மரத்தின் நிழலின் கீழ், பட்டுடை உடுத்தி, சாந்தமிகு தோள்களையுடைய, கட்டழகினராய், ஒளிவீசு சந்திர முகத் தையுடையவராய் சரீரத்தின் கண் ஆடை உடுத்தவராய் வலிமை மிகு இரு வாவிபர்கள் விட்டொளிர் மின்னல் போல, விரைந்து வந்து சேர்ந்தனர்.

கண்டதும்...

முகம்மது தோழச் சீறார்கள் அனைவரும் பயந்து நடுங்கி நின்றனர்.

திடுக்கிட்டுப் பதறிச் சிதறியோடினர். முகம்மதுவை அவர்களிருவரும் மரத்தின் நிழலின் கண் படுக்கும்படி செய்து, இதயக் கமலக்காயாகிய முகையைப் பிளந்து. கறை, கசடு, தீமைகளைக் களைந்து, நீரால் கழுவி ஈமான் நல்லறிவால் நிரப்பினர். பின் பிடரியின் கீழ் இரண்டு தோள்களின் நடுவினில் புறாமுட்டை அளவு முத்திரை எனும் அவ் இலாஞ் சினையினை இட்டனர். பின் பெருமானாரைப் பார்த்து இரு வானவர்களும் நீவீர் சொர்க்கப் பலன்-பதம் பெறுவீர்! கோடானுகோடி மனிதர்களுக்கு நிறையாவீர்! ஆதிநாள் முதல் முடிவுநாள் வரை உமக்கு யாரும் ஒப்பாகார்! உமது ஷபா அத்தால் மன்பதை குலம் ஈடேற்றம் பெறும்! ஹபீபுல்லா! என ஏத்தி, புகழ்ந்து, மகிழ்ந்து, வாழ்த்தி வானேறினர். இந் நிகழ்ச்சி இயற்கை மீறிய ஆட்சியன்றோ! இவ் அறுவை நிகழ்வுக்குப் பின்பும் முகம்மது (சல்) பொன் மேனி புண்படாது, தழும்பேறாது, எச்சுவடுமின்றி காண்ப்பட்டது என்பதும் கருதத்தக்கது. ஜிபுரயீல், மீக்காயில்