பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253


உமறுவின் வர்ணனைத் திறந்தால் வடிவெடுத்த போதிலும் பெருமானார் வாழ்வில் நடைபெற்ற தெய்வீக நிகழ்ச்சியாம் அது.

ஒளி உருவம்-ஜிபுயீல்[1]

அமரர்கோன் ஜிபுரயீல் அவர்கள் ஹிரா மலையில் ஆகாயத்திலிருந்து வந்திரங்கியதனை, நபிப்பட்டம் பெற்ற படலத்தின் கண்,

" நித்தில நிரைத்த விருசிறை யொழுங்கு
    நீணிலாக் கதிர்கள் விட் டொழுக
வித்துரு மத்தாள் சிறந்தணி திகழ்
    வில்லுமிழ் கரங்கிடந் திலங்கப்
பத்திவிட் டெறிக்குஞ் செம்மணி யிருகட்
    பார்வையிற் கருணை வீற் றிருக்கச்
சித்திர வடிவைச் சுருக்கிமா னுடர்போல்
    ஜிபுரயீ லவ்விடத் தடைந்தார்." [2]

என ஜிபுரயீல் உருவத்தினை முத்துக்கள் நிறைக்கப்பெற்ற இரு சிறகுகளின் ஒழுங்குகளும், நீணட ஒலியானது சுடர்களை வீசும் பவளம் போன்ற இருபாதங்களும் சிறப்புற்று அழகு பிரகாசிக்கவும், ஒளியை உமிழ்கின்ற இருகைகளும் ஒளிரவும், வரிசையை விட்டு பிரபையை வீசா நிற்கும் சிவந்த இரத்தினங்கள் போன்ற இருகண்களின் பார்வைகளிலும் அருள் வீற்றிருக்குங் தனது அழகிய உருவத்தினை 'சித்திர வடிவினை' சுருக்கி மனித வடிவில் அமரர் கோன் ஜிபுரயீல் (அலை) அவன் வந்திறங்கினார்கள் எனப் பாடுகிறார் உமறுப் புலவர்.

ஜிபுறயீல் வழி வஹி-திருமறை வெளிப்பாடு

மக்க மாநகர் அண்மையிலுள்ள ஹிரா மலைக்குச் சென்று முஸ்தபா ரசூல் (சல்) அவர்கள் பசித்திருந்து, தனித்

  1. 1. "காந்தியினொலி இலங்குகத்தவன் ஜிபுறயீல்"...திருநெறி நீதம் 459
  2. 2. சீறா நபிப்பட்டம் பெற்ற படலம் 12